மே மாதம் இறுதியில் வெளியாகும் ஜன நாயகன் படம்? வைரலாகும் தகவல்
Jana Nayagan movie team plans to release on May 28 | தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் வெளியீடு எப்போது என்பது குறித்து தகவல்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

ஜன நாயகன்
தமிழ் சினிமாவில் பல சூப்பர் டூப்பட் ஹிட் படங்களில் நடித்து தற்போது தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்க உள்ளார் நடிகர் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் மட்டுமே நடிகர் விஜய் தொடர்ந்து படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு தென்னிந்திய சினிமா முழுவது பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் விஜய் தற்போது தமிழக அரசியலில் தீவிரமாக களமிறங்கி உள்ளதால் இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவரது நடிப்பில் இறுதியாக உருவான ஜன நாயகன் படம் மட்டும் திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் எச்.வினோத் எழுதி இயக்கி உள்ள இந்தப் படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து இருந்த நிலையில் படத்தை கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. சென்சார் பிரச்சனை காரணமாக படம் தொடர்ந்து வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது படத்தில் ரிலீஸ் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மே மாதம் இறுதியில் வெளியாகும் ஜன நாயகன் படம்?
தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு தற்போது விஜய் வெற்றிப் பெற்றுள்ள நிலையில் அவரது நடிப்பில் இறுதியாக உருவான ஜன நாயகன் படத்தை வெளியிட படக்குழு தீவிரம் காட்டி வருகின்றது. அந்த வகையில் தற்போது ஜன நாயகன் படம் வருகின்ற 28-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. இது விஜய் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Also Read… மண்டாட்டியில் நடிகர் சூரியின் கதாப்பாத்திரம் எப்படி இருக்கும்? வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#JanaNayagan — May 28th Plan pic.twitter.com/MQYhOD854d
— Movie Tamil (@_MovieTamil) May 6, 2026
Also Read… இன்னும் 30 நாட்களில்… ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட ராம் சரணின் பெடி படக்குழு!