தனுஷின் 55-வது படம் எப்படி இருக்கும்? இணையத்தில் கசிந்த தகவல்
Dhanush 55 Movie Update: தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது 55-வது படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். மேலும் இந்தப் படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ராஜ்குமார் பெரியசாமி மற்றும் தனுஷ்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ் (Actor Dhanush). கோலிவுட் சினிமாவை ஹாலிவுட் வரை பிரபலமாக்கிய சில நடிகர்களில் இவரும் ஒருவர். இவரது நடிப்பை உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது 52-வது படத்தை தானே இயக்கி நடித்து இருந்தார். இட்லி கடை என்று பெயர் வைக்கப்பட்டு இருந்த அந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது 53-வது படத்திற்காக பாலிவுட் இயக்குநர் ஆனாந்த் எல் ராய் உடன் கூட்டணி வைத்தார். அதன்படி இவரது இயக்கத்தில் இந்தி மற்றும் தமிழில் உருவாகியுள்ள தேரே இஸ்க் மெய்ன் படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை கிருத்தி சனோன் நாயகியாக நடித்துள்ளார்.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வருகின்ற 28-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷின் 54-வது படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளார். இதுகுறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் தொடர்ந்து பேட்டியில் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆக்ஷன் படமாக உருவாகும் தனுஷின் 55-வது படம்:
இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷின் 55-வது படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதன்படி ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள இந்தப் படம் அதிரடி ஆக்ஷன் படமாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
CONFIRMED: Sources close to our team has confirmed that @dhanushkraja & @Rajkumar_KP‘s film is going to be a grand ACTION FILM 🔥 #D55 to go on floors this year. pic.twitter.com/qTRxNDXHoI
— Dhanush Trends ™ (@Dhanush_Trends) November 2, 2025
Also Read… தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஜெய் பீம் படம் 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது!