சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு படம் நடைபெறாதா? இணையத்தில் வைரலாகும் தகவல்

Sivakarthikeyan and Venkat Prabhu Film Is Not Going Happen : இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாவதாக கூறப்பட்ட படம் தற்போது உருவாகாது என சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு படம் நடைபெறாதா? இணையத்தில் வைரலாகும் தகவல்

சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு

Published: 

26 Mar 2026 17:43 PM

 IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வெங்கட் பிரபு. இவர் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி இருந்தாலும் நடிப்பை விட இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்களையே ரசிகர்கள் அதிக அளவில் கொண்டாடித் தீர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி காமெடி எண்டெர்டெய்மெண்ட் கதைகளை அதிக அளவில் இயக்கிய வெங்கட் பிரபுவிற்கு தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களின் பட்டாளம் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்படி இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்தப் படத்தில் பல டெக்னாலஜிகளை இயக்குநர் வெங்கட் பிரபு பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்து எந்த படத்தை இயக்குவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த நிலையில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தினை இயக்குவதற்கு முன்னதாக வெங்கட் பிரபு மற்றும் சிவகார்த்திகேயனின் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியானது. இது தொடர்பான அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் நடைபெறாது இப்போதைக்கு என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு படம் நடைபெறாதா?

சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகவிருந்த திரைப்படம் தற்போது நடைபெறாது என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. மேலும் அதற்குப் பதிலாக, வெங்கட் பிரபு தனது அடுத்த முயற்சியாக மங்காத்தா 2 படத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். எனவே, மங்காத்தாவின் தொடர்ச்சியைத் தயாரிக்கக் கோரி அவர் தயாரிப்பாளர் கண்ணன் ரவியை அணுகியுள்ளார். மறுபுறம், அஜித் குமார் நடிப்பில் ஆதித் மற்றும் சிறுத்தை சிவா ஆகியோரின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகக் காத்திருக்கின்றன. அனைத்தும் சாதகமாக அமைந்தவுடன், இத்திட்டம் தொடங்கப்படும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.

Also Read… ரீ ரிலீஸாகும் மோகன்லாலின் சூப்பர் ஹிட் த்ரிஷ்யம் 2 படம்… எப்போது தெரியுமா?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Mrunal Thakur: ஒரு தமிழ் படம் கூட நடிக்கல.. ஆனால் தமிழில் பேசி விளாசிய மிருணாள் தாக்கூர் – வீடியோ இதோ!

Follow Us
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..