காதலர் தினத்தை குறிவைக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு… வைரலாகும் ரிலீஸ் தகவல்
Love Insurance Kompany: தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக வெளியீட்டிற்கு காத்திருக்கும் படங்களில் ஒன்று லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தப் படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிபோய்கொண்டே இருக்கும் நிலையில் வருகின்ற பிப்ரவரி மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி
தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதுப் படங்கள் வெளியாகி வந்தாலும் பலப் படங்கள் உருவாகி தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2 ஆண்டுகளாக உருவாகி திரையரங்குகளில் வெளியாகாகம் தொடர்ந்து தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும் படம் தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே தொடர்ந்து படத்தில் பல மாற்றங்கள் நடைப்பெற்றுக்கொண்டே வருகின்றது. அதன்படி இந்தப் படத்திற்கு முன்னதாக லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தினை எல்.ஐ.சி என்று அழைத்தனர். ஆனால் எல்.ஐ.சி என்று அழைக்க கூடாது என்று அந்த நிறுவனம் தெரிவித்ததைத் தொடர்ந்து அந்தப் படத்தினை சுறுக்கமாக எல்.ஐ.கே என்று படக்குழு அழைக்கத் தொடங்கினர்.
பின்பு படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வந்தாலும் கடந்த 2025-ம் ஆண்டில் இருந்தே தொடர்ந்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் வெளியீட்டு தேதி தொடர்ந்து அறிவிக்கப்பட்டு தள்ளிப்போய்கொண்டே இருக்கின்றது. இந்தப் படத்தின் ஒன் லைன் குறித்து அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ள நிலையில் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
காதலர் தினத்தை குறிவைக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு:
இந்த நிலையில் தற்போது மீண்டும் லவ் இன்சூரன்ஸ் படத்தின் வெளியீடு குறித்து சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இந்தப் படம் வருகின்ற பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரம் திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. அப்படி இந்தப் படம் வெளியாவதாக இருந்தால் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவரா? இணையத்தில் கசிந்தது தகவல்
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#LoveInsuranceKompany is planning to release the film in FEB.
Feb 2nd Weekend Mostly Movie Release Plan…..#LIK pic.twitter.com/fDYyBdZXIl
— Movie Tamil (@_MovieTamil) January 19, 2026