தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… இணையத்தில் வைரலாகும் ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தேதி?
Jana Nayagan Movie Release Update: தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி குறித்து தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ஜன நாயகன்
தமிழ் சினிமாவில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த படம் ஜன நாயகன். நடிகர் தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக உருவான படம் என்பதால் இந்தப் படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் காத்து இருந்தனர். மேலும் இனி நடிகர் விஜய் படங்களில் நடிக்க மாட்டார் அவரது நடிப்பில் ஜன நாயகன் தான் கடைசியாக உருவான படம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. நடிகர் விஜய் தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் அப்படி தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஜன நாயகன் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் படம் வெளியீட்டு தேதிக்கு முன்னதாக படத்திற்கான சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக சென்சார் தொடர்பான பிரச்சனைகள் தொடர்ந்து நடைப்பெற்று வந்தது. மேலும் படம் வெளியாகுமா? எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருந்து ரசிகர்களும் சோர்வு அடைந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிவைசிங் கமிட்டி படத்தை பார்த்துவிட்டு தேர்தல் ஆனையம் பார்ப்பதற்கு பரிந்துறைந்து இருந்தது. இந்த நிலையில் படத்திற்கான சென்சார் அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபப்டுகின்றது.
ஜூலை 2026-ம் ஆண்டில் வெளியாகும் ஜன நாயகன் படம்?
இந்த நிலையில் சமீபத்தில் சினிமா வட்டாரங்களில் தகவல் ஒன்று பரவி வைரலாகி வருகின்றது. அதன்படி. ஜன நாயகன் திரைப்படம் ஜூலை 2026-இல் வெளியாகும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், சமீபத்தில் அமேசான் ப்ரைம் நிறுவனம் இதற்கான ஓடிடி ஒப்பந்தத்தையும், பார்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் இதன் வெளிநாட்டு விநியோக ஒப்பந்தத்தையும் திரும்பப் பெற்றுக்கொண்டன.
இதற்கிடையில், கேவிஎன் நிறுவனம் யாஷின் டாக்ஸிக் மற்றும் துருவா சர்ஜாவின் கேடி தி டெவில்ஆகிய படங்களை வெளியிடும். அதே சமயம், தயாரிப்பு நிறுவனம் புதிய ஓடிடி தளம் மற்றும் வெளிநாட்டு விநியோகஸ்தருடன் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளவுள்ளதால், இதற்குச் சிறிது காலம் பிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Also Read… ரோம்-காம் பாணியில் வெளியாகியுள்ள ஹேப்பி ராஜ் படம் எப்படி இருக்கு? மக்களின் விமர்சனம் இதோ
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
As per Valaipechu,#JanaNayagan is scheduled to release on July 2026. Recently Amazon Prime has withdrawn the OTT Deal & also Phars Films have withdrawn Overseas deal as the film is getting delayed !!
In the meantime KVN will release Yash’s #Toxic & DhruvaSarja’s #KDTheDevil. In… pic.twitter.com/CR6HRRFAoL
— AmuthaBharathi (@CinemaWithAB) March 27, 2026
Also Read… ராம் சரண் பர்த்டே ஸ்பெஷல்… பெத்தி படத்தின் கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்ட படக்குழு