சூர்யா 47 படத்தில் கேமியோ தோற்றத்தில் பிரபல தமிழ் நடிகர்… வைரலாகும் தகவல்
In Suriya 47 Movie Star Hero Will Play Cameo Role: நடிகர் சூர்யா அடுத்தடுத்தப் படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரது 47-வது படத்தில் ஒரு ஸ்டார் நடிகர் கேமியோ வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சூர்யா 47
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பு வாழ்க்கை மற்றும் சொந்த வாழ்க்கை என அனைத்தும் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உள்ளது. தொடர்ந்து தமிழக மக்கள் மற்றும் ரசிகர்கள் மட்டும் இன்றி தென்னிந்திய திரையுலகில் உள்ளவர்களும் சூர்யாவின் கேரக்டர் குறித்து பல இடங்களில் பெருமையாக பேசிவருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே சூர்யாவின் நடிப்பில் வெளியாகும் படங்கள் வெற்றி அடைந்தாலும் இல்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கான வரவேற்பு மட்டும் எப்போதும் குறைவதே இல்லை. இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இறுதியாக கடந்த 2025-ம் ஆண்டு மே மாதம் ரெட்ரோ படம் வெளியானது. அந்தப் படத்தினை தொடர்ந்து அடுத்ததகா கடந்த ஆண்டே கருப்பு படம் வெளியாக திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் திட்டமிட்டப்படி அந்தப் படம் கடந்த 2025-ம் ஆண்டில் வெளியாகவில்லை. தற்போது 2026-ம் ஆண்டிலும் இதுவரை வெளியீட்டு தேதியை கூறாமல் இருப்பது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகி வரும் படங்கள் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி சூர்யாவின் 46-வது படமான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுவிட்டது.
சூர்யா 47 படத்தில் கேமியோ தோற்றத்தில் பிரபல தமிழ் நடிகர்:
அந்தப் படத்தை தொடர்ந்து தனது 47-வது படத்திற்காக நடிகர் சூர்யா மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் ஜித்து மாதவன் உடன் கூட்டணி வைத்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
அதன்படி சூர்யா 47 படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் ஒரு ஸ்டார் நடிகர் கேமியோ வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் அந்த கதாப்பாத்திரத்தின் மூலம் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான லீட் வைக்க இயக்குநர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அந்த கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் சிலம்பரசனை இயக்குநர் ஜித்து மாதவன் சந்தித்து பேசியதாகவும் இன்னும் சிம்பு பதிலளிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Suriya47 BUZZ – In the climax 💥, a star 🌟 hero will make an important special appearance cameo that will lead to Part 2. #JithuMadhavan, just like #Aavesham, is planning this as a franchise, with the second part being a two-hero entertainer 🔥
Talks are said to be ongoing… pic.twitter.com/dF4xwnK6Tr
— Movies Singapore (@MoviesSingapore) March 11, 2026
Also Read… விஜயை ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்ப்பதற்காவே நிறைய கூட்டம் கூடும் – நடிகை பிரியங்கா சோப்ரா!