வேள்பாரி நாவலை படமாக்க தயாராகும் இயக்குநர் சங்கர்… இணையத்தில் கசிந்த தகவல்
Director Shankar: கோலிவுட் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குநர் சங்கர். இவரது இயக்கத்தில் அடுத்ததாக வேள்பாரி நாவலை மையமாக வைத்து உருவாக உள்ள படம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவந்த்தை ஈர்த்து வருகின்றது.

இயக்குநர் சங்கர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களை வைத்து பல ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குநர் சங்கர். சினிமா ரசிகர்களால் பிரமாண்ட இயக்குநர் என்று கொண்டாடப்படும் இவர் கடந்த 1993-ம் ஆண்டு வெளியான ஜென்டில் மேன் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். நடிகர் அர்ஜுன் நாயகனாக நடித்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேறபைப் பெற்றது. மேலும் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே சங்கருக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்த நிலையில் அடுத்தடுத்து இவரது இயக்கத்தில் வெளியான படங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி தி பாஸ், எந்திரன், நண்பன், ஐ மற்றும் 2.0 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்த இயக்குநர் சங்கருக்கு இறுதியாக இவரது இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் படு தோல்வியை சந்தித்தது. அடுத்தடுத்து இரண்டு படங்களும் இவரது இயக்கத்தில் தோல்வியை சந்தித்ததால் இவரது ரசிகர்களிடையே அதிருப்தி ஏற்பட்டது. அடுத்ததாக இந்தியன் 3 படத்தை இயக்குநர் சங்கர் இயக்கி வரும் நிலையில் வேல்பாரி நாவலை அவர் எப்போது படமாக்க உள்ளார் என்பது குறித்த தகவல் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றது.
2026-ம் ஆண்டில் தொடங்கும் வேள்பாரி படம்:
இந்த நிலையில் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான வேள்பாரி நாவலை மையமாக வைத்து படம் இயக்க உள்ளதாக முன்னதாகவே இயக்குநர் சங்கர் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் அவர் இந்தப் படத்திற்கான பிரீ புரடெக்ஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அடுத்த 2026-ம் ஆண்டு ஜூன் மாதம் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்தப் படத்தில் கோலிவுட் நடிகரே நாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது.
Also Read… 15 ஆண்டுகளை நிறைவு செய்த மைனா படம்… டி இமான் வெளியிட்ட பதிவு
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
Director #Shankar is all set to begin his epic saga #Velpari from June 2026🔥
Pre production is currently underway 🎬
A Kollywood Actor is expected to play the titural character🌟 pic.twitter.com/j0O4lIn3S8— AmuthaBharathi (@CinemaWithAB) December 2, 2025
Also Read… விறுவிறுப்பாக நடைபெறும் லோகேஷ் கனகராஜின் டிசி படத்தின் படப்பிடிப்பு – அப்டேட் இதோ