அரசன் படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்? வைரலாகும் அப்டேட்

Silambarasan Arasan Movie Shooting Update: நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் படம் அரசன். இந்தப் படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்து தற்போது சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அரசன் படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்? வைரலாகும் அப்டேட்

சிலம்பரசன்

Published: 

26 Feb 2026 11:50 AM

 IST

கோலிவுட் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நாயகனாக வலர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இடையில் சில ஆண்டுகளாக நடிகர் சிலம்பரசன் உடல் எடை அதிகரித்து அவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்கள் பெற்று வந்தாலும் அவரது ரசிகர்கள் சிம்பு மீது வைத்து இருந்த நம்பிக்கை அபரிமிதமானது. தனது ரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் உடல் எடையை குறைத்து மீண்டும் தமிழ் சினிமாவில் மாஸாக ஒரு ரீ எண்ட்ரி கொடுத்தார் நடிகர் சிம்பு. அந்த ரீ எண்ட்ரிக்கு பிறகு சிம்புவின் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் அரசன். இயக்குநர் வெற்றிமாறன் எழுதி இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு பூஜையுடன் தொடங்கியது. முதலில் கோவில்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைப்பெற்று வந்தது. இந்த நிலையில் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அரசன் படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்?

அரசன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் சென்னையில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக மீண்டும் கோவில்பட்டிக்கு செல்லலாம் என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் டி.ஆர். அரசன் படத்தில் மூன்று காலகட்டங்களில் மூன்று தோற்றங்களில் நடிப்பார் என்றும் அதன்படி 1980, 1992 மற்றும் 1995. கதை மதுரையைச் சேர்ந்த ஒரு கபடி வீரர் சென்னையில் ஒரு கேங்ஸ்டராக மாறுவதைச் சுற்றி வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனாவிற்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… தலைவர் 173 படத்தில் இணையும் பிரபல நடிகர்கள்? இணையத்தில் கவனம் பெறும் தகவல்

Follow Us
மகனுக்கு ரூ.4 கோடி மதிப்பிலான காரை பரிசளித்த ஹர்திக் பாண்ட்யா
பூமிக்கு அருகே வரும் மிகப்பெரிய விண்கல்..
முழுவதும் விஷ பாம்புகளால் நிறைந்த தீவு பற்றி தெரியுமா?
நான்காவது நாளாக தொடர் உயர்வை சந்தித்த தங்கம்.. ரூ.15,000-த்தை நெருங்கியது!