பெரம்பூர் தொகுதியில் நள்ளிரவில் பணப்பட்டுவாடா..? வீடியோ வெளியிட்டு பாமக வேட்பாளர் திலகபாமா குற்றச்சாட்டு!
வருகின்ற 2026 ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையடுத்து, அந்தந்த பகுதியை சேர்ந்த வேட்பாளர்கள் தேர்தல் பரப்புரை, ரோடு ஷோ, பொதுக்கூட்டம், மாநாடு என தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், பெரம்பூர் தொகுதியில் நள்ளிரவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாகவும், தங்களது நடவடிக்கையால் அதிரடியால் தடுக்கப்பட்டதாகவும் பாமக வேட்பாளர் திலகபாமா தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளாது. இதுகுறித்து பேசிய அவர், “தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மீது நம்பிக்கை இல்லை. தேர்தல் அதிகாரிகளும், காவல்துறையும் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. பொதுமக்களுக்கு கூட இந்த பண விநியோகம் தெளிவாக தெரியும் நிலையில், அதிகாரிகளுக்கு அது தெரியாதது ஏன்” என்று கேள்வி எழுப்பினார்.