கோச்சடையான் வெளியான பிறகு பல விமர்சனங்களை எதிர்கொண்டேன் – சௌந்தர்யா ரஜினிகாந்த்
Soundarya Rajinikanth About Kochadaiiyaan: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கோச்சடையான் படம் நெகட்டிவான விமர்சனங்களை பெற்றது குறித்து அந்தப் படத்தின் இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.

சௌந்தர்யா ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளாக அறியப்பட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த் பிறகு கிராஃபிக்ஸ் டிசைனராகவும், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராகவும் அறியப்பட்டு வருகிறார். இவர் கடந்த 1999-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படையப்பா படத்தில் கிராஃபிக்ஸ் டிசைனராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் டைட்டில் செகெட்ச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து பாபா, சந்திரமுகி, அன்பே ஆருயிரே, சிவகாசி, மஜா மற்றும் சண்டக்கோழி என பலப் படங்களுக்கு கிராஃபிக்ஸ் டிசைனராக பணியாற்றி உள்ளார். தொடர்ந்து கிராஃபிக்ஸ் டிசைனராக மட்டும் இன்றி இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோவா படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். மேலும் பலப் படங்களை தொடர்ந்து தயாரித்து வந்தார்.
இந்த நிலையில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் திரைக்கதையை இயக்கியதன் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் சௌந்தர்யா ரஜினிகாந்த். அதன்படி கோச்சடையான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் முழுக்க முழுக்க மிகப்பெரிய பொருட் செலவில் அனிமேஷனை வைத்து எடுத்து இருந்தனர். ஆனால் படம் திரையரங்குகளில் வெளியான போது படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கோச்சடையான் வெளியான பிறகு பல விமர்சனங்களை எதிர்கொண்டேன்:
கோச்சடையான் வெளியான பிறகு எனக்கு நிறைய விமர்சனங்கள் வந்தன. அப்போது மக்களுக்கு அனிமேஷன் புரியவில்லை. புதிய விஷயங்களை அவர்கள் வரவேற்காதது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. பலர் அதை பொம்மை படம் என்று கூறி, அது ரஜினிகாந்த் இல்லை என்று கூறினர். ஆம், அந்த நேரத்தில் அது மிகவும் மனக்கஷ்டமாக இருந்தது.
அட்லீ இப்போது தீபிகா படுகோனே அனிமேஷன் பாடி சூட்டைப் பயன்படுத்தியதைப் போல, 10 ஆண்டுகளுக்கு முன்பு நானும் இதேபோன்ற ஒன்றை முயற்சித்தேன். இப்போது மகா அவதார் நரசிம்ம இந்தியாவின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாக மாறுவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் தெரிவித்து இருந்தார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… ஓடிடியில் வெளியாகி உள்ள மன ஷங்கர வர பிரசாத் காரு படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
இணையத்தில் வைரலாகும் சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சு:
#SoundaryaRajinikanth 🗣️ Recent Interview:
— After the release of #Kochadaiiyaan 🎬, I faced a lot of criticism. At that time, people didn’t really understand animation. It hurt me because the effort to try something new wasn’t welcomed. Many called it a “bommai padam” and said… pic.twitter.com/AaZd32zRQg
— Movie Tamil (@_MovieTamil) February 14, 2026
Also Read… Pradeep Ranganthan: லவ் என்றாலே போராட்டம் தானே.. காதல் குறித்து பிரதீப் ரங்கநாதன் பரபரப்பு பேச்சு!