Soori: யாரும் யாருக்கும் போட்டி இல்லை.. விஜய் – சிவகார்த்திகேயன் குறித்து சூரி கருத்து!

Soori About Vijay And Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, வளர்ந்துவரும் கதாநாயகன்தான் சூரி. இவரின் நடிப்பில் படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்கப்பட்டுவருகிறது. இன்று (2025 டிசம்பர் 14ம் தேதி) மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சூரி, விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்கும் இடையேயான ஒப்பீடு குறித்து மனம்திறந்துள்ளார் .

Soori: யாரும் யாருக்கும் போட்டி இல்லை.. விஜய் - சிவகார்த்திகேயன் குறித்து சூரி கருத்து!

விஜய் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி

Published: 

14 Dec 2025 22:39 PM

 IST

நடிகர் சூரி (Soori) தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவருகிறார். ஆரம்பத்தில் படங்களில் அங்கீகரிக்கப்படாத வேடங்களில் நடித்து, பின் காமெடியன் மற்றும் தற்போது ஹீரோவாகவும் வளர்த்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்துள்ளார். தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) வரை பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaaran) இயக்கத்தில் விடுதலை (Viduthalai)என்ற படத்தின் மூலம் இவர் சினிமாவில் முதல் முதலில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தார். இந்த படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானார். தொடர்ந்து கருடன் மற்றும் மாமன் (maaman) என படங்களில் ஹீரோவாகவே நடிக்க தொடங்கிவிட்டார். இந்த படங்களை தொடர்ந்து சினிமாவில் தொடர்ந்து ஹீரோவாகவே நடிப்பதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும் தற்போது மண்டாடி (Mandaadi) என்ற படத்தில் இணைந்து நடித்தவருகிறார்.

இப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படமாக தயாராகிவருகிறது. இந்நிலையில் இன்று 2025 டிசம்பர் 14ம் தேதியில் மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சூரி, விஜய் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு (Sivakarthikeyan) இடைய போட்டி நிலவுவதாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு தக்க பதிலை கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: பிக்பாஸ் வழக்காடு மன்றத்தில் எஃப்ஜே செய்த விசயம்… அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய விஜய் சேதுபதி

விஜய் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு இடையேயான போட்டி குறித்து சூரி கருத்து :

அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சூரி, ” சினிமாவில் யாரும் யாருக்கும் போட்டி கிடையாது. விஜய் அண்ணன்.. விஜய் அண்ணன்தான். SK தம்பி (சிவகார்த்திகேயன்) தம்பிதான். தளபதி விஜய் அண்ணன் சினிமாவின் உச்சத்தில் உள்ளார் மேலும் தற்போதுதான் சிவகார்த்திகேயன் தம்பி வளர்ந்துவருகிறார்.

இதையும் படிங்க: இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சூர்யா 46 படம்… ரிலீஸ் எப்போது தெரியுமா?

சினிமாவில் ஒவ்வொருவரும் தங்களது வேலையை சரியாக திறன்பட செய்துவந்தால் அவர்கள் வளர்ச்சியை பெறலாம். அனைவருக்கும் மக்களின் ஆதரவு இருக்கிறது” என அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அஜித் குமார் சந்தித்தது குறித்து சூரி பகிர்ந்த எக்ஸ் பதிவு :

நடிகர் சூரி, இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி என்ற படத்தில் நடித்துவருகிறார். இதில் சூரியுடன் நடிகர்கள் சுஹாஸ், மகிமா நம்பியார். சத்யராஜ், பால சரவணன் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது மீனவர்கள் தொடர்பான கதைக்களத்தில் உருவாகிவருகிறது. மேலும் இப்படம் வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

தாமதமான இண்டிகோ விமானம்.... பெட் சீட்டை கையோடு எடுத்து வந்த பயணி
இந்த இண்டிகோ தாமதமாகாது.... இண்டிகோ விமானம் போல டிசைன் செய்யப்பட்ட ஆட்டோ
அமெரிக்கா போறீங்களா? இனி டிஎன்ஏ, சமூக வலைதள பரிசோதனை கட்டாயம்
பாகிஸ்தான் திருமணத்தில் துரந்தர் பட பாடல்