வார்த்தைகள் போதவில்லை… மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும் – மாமன் படம் குறித்து நடிகர் சூரியின் நெகிழ்ச்சிப் பதிவு

Actor Soori: நடிகர் சூரி நடிப்பில் முழுக்க முழுக்க ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக திரையரங்குகளில் வெளியான படம் மாமன். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் நடிகர் சூரி தற்போது இதற்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வார்த்தைகள் போதவில்லை… மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும் - மாமன் படம் குறித்து நடிகர் சூரியின் நெகிழ்ச்சிப் பதிவு

மாமன்

Published: 

13 Jun 2025 19:40 PM

நடிகர் சூரி (Actor Soori) நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் மாமன் (Maaman Movie). இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 30 நாட்களை கடந்துள்ள நிலையில் நடிகர் சூரி படம் குறித்தும் படத்திற்கு ஆதரவு தெரிவித்த மக்கள் குறித்து நெகிழ்ச்சியாக பதிவு ஒன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “இன்று நம்ம படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 30வது நாளை எட்டியது. இந்த வெற்றி முழுக்க முழுக்க உங்கள் அன்புக்கே. வார்த்தைகள் போதவில்லை… மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும் என்று தெரிவித்துள்ளார். மேலும் படம் முதல் நாளில் எளிமையாகத் தொடங்கியது. ஆனால், சில நாட்களிலேயே குடும்ப ரசிகர்கள் திரையரங்குகளுக்குள் வந்ததோடு, அது ஒரு பெரும் அலை போல பரவியது.

மாமன் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்று 30 நாட்கள் நிறைவடைந்துள்ள இந்த பயணம் உங்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல் சாத்தியமா? நிச்சயமாக இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்த படம் பிரம்மாண்டமான ஆக்ஷன் படம் இல்லை. இது நம் வாழ்க்கையோடு இணைந்த உறவுகளின் தாக்கமும், சின்னச் சின்ன கனவுகளின் ஓசையும் கொண்ட கதை” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் சூரி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

மேலும் இந்தப் பதிவில் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு இந்தப் படத்தை வெற்றிப் படமாக மாற்றிய ரசிகர்களுக்கும் அவர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார். முழுக்க முழுக்க ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

சூரியின் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த மாமன் படம்:

நடிகர் சூரி நடிப்பில் கடந்த மே மாதம் 16-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் மாமன். இந்தப் படத்திற்கு சூரி திரைக்கதை எழுதியுள்ள நிலையில் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி இருந்தார். இவர் முன்னதாக விலங்கு என்ற சூப்பர் ஹிட் வெப் சீரிஸை இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் சூரியின் ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்து இருந்தார். இவர்களின் கெமிஸ்ட்ரி படத்தில் சிறப்பாக இருந்தது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். மாமன் மன்று மருமகனின் பாசப் போரட்டத்தை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறியது குறிப்பிடத்தக்கது.