நெட்ஃபிளிக்ஸில் ஸ்கேட்டர் கேர்ள் என்ற ஸ்போர்ஸ் படத்தை பார்க்காமல் தவறவிடாதீர்கள்

Skater Girl: சினிமாவில் ஒவ்வொரு ஜானருக்கும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருவார்கள். ஆனால் அனைத்து தரப்பினருக்கும் பிடித்த ஜானர் என்ற்றால் அது ஸ்போர்ட்ஸ் தான். எப்படி ஒரு ஃபீல் குட் படத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பு இருக்குமோ அப்படிதான் ஸ்போர்ட்ஸ் படத்திற்கும் வரவேற்பு அதிகமாக இருக்கும்.

நெட்ஃபிளிக்ஸில் ஸ்கேட்டர் கேர்ள் என்ற ஸ்போர்ஸ் படத்தை பார்க்காமல் தவறவிடாதீர்கள்

ஸ்கேட்டர் கேர்ள்

Published: 

27 Aug 2025 20:17 PM

இந்திய சினிமாவைப் பொருத்தவரை ரசிகர்களின் ரசனை என்பது வெவ்வேறானதாக மாறி மாறி இருக்கு. சிலருக்கு ஆக்‌ஷன் படம் பிடிக்கும். சிலருக்கு காமெடி படம் பிடிக்கும். சிலருக்கு த்ரில்லர் படங்கள் பிடிக்கும், சிலருக்கு ஃபேமிலி செண்டிமெண்ட் படங்கள் பிடிக்கு. ஆனால் இவர்கள் அனைவருக்கும் பிடித்தமான ஜானர் என்றால் அது ஸ்போர்ஸ் ஜானர்தான். ஃபீல் குட் படங்களை பார்த்து முடிக்கையில் மனதிற்கு எவ்வளவு ஆசுவாசமாக இருக்குமோ அப்படிதான் ஸ்போர்ஸ்ட் ட்ராமா படத்தைப் பார்த்து முடிக்கும் போது இருக்கும். அப்படி ஒரு ஸ்போர்ஸ்ட் ட்ராமா படம் குறித்து தான் தற்போது பார்க்கப் போகிறோம். கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 11-ம் தேதி இந்தி சினிமாவில் வெளியான படம் ஸ்கேட்டர் கேர்ள். இந்தப் படத்தை இயக்குநர் மஞ்சரி மகிஜானி எழுதி இயக்கி உள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் ரேச்சல் சஞ்சிதா குப்தா, ஷ்ரத்தா கெய்க்வாட், அம்ரித் மகேரா, வஹீதா ரஹ்மான், ஷபின் படேல், அனுராக் அரோரா, ஜொனாதன் ரீட்வின், சுவாதி தாஸ், அங்கித் ராவ், அம்ப்ரிஷ் சக்சேனா, விவேக் யாதவ், சோஹன் சுஹல்கா, சாஹிதுர் ரஹ்மான் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் மஞ்சரி மகிழனி, வினாதி மகிஜானி, இம்மானுவேல் பாப்பாஸ் ஆகியோர் ஸ்கேட்பார்க் பிலிம்ஸ் மற்றும் மேக் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் கீழ் இந்தப் படத்தை தயாரித்து இருந்தனர்.

ஸ்கேட்டர் கேர்ள் படத்தின் கதை என்ன?

ராஜஸ்தான் பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்திற்கு பிரிட்டிஷ் இந்தியப் பெண் ஒருவர் வருகிறார். அவரது தந்தையை அந்த கிராமத்தில் இருந்து அவரது தாத்தா தத்தெடுத்து வந்ததால் அந்த கிராமத்திற்கு செல்கிறார். அங்கு அந்த கிராமத்தில் இருக்கும் போது அவரைப் பார்ப்பதற்காக அவரது நண்பர் ஒருவர் வருகிறார். அவர் ஸ்கேட் போர்ட் வைத்து இருப்பதைப் பார்த்த அந்த பகுதி சிறுவர்கள் அதனைக் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார்கள்.

அதைப் பார்த்த ஜெசிகா அந்த சிறுவர்களுக்கு ஸ்கேட் போர்ட் அவர் செலவில் வாங்கி கொடுத்து அதனை எப்படி ஓட்ட வேண்டும் என்றும் சொல்லிக்கொடுக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த ஸ்கேட்டிங் அந்த குழந்தைகளின் வாழ்க்கையை மாற்றுகிறது. இந்த நிலையில் அந்த ஊரில் உள்ள சிலர் அந்தகுழந்தைகளின் கனவுகளை களைக்கும் விதாமக செயல்படுகிறார்கள்.

Also Read… விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியானது விஷாலின் மகுடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

இந்த சதிகளை எல்லாம் முறியடித்து அந்த குழந்தைகளை ஸ்கேட்டிங்கில் ஜெசிக்கா எப்படி முன்னேற்றுகிறார் என்பதே படத்தின் கதை. மிகவும் அழகான இந்த ஸ்போர்ஸ் ட்ராமா படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

ஸ்கேட்டர் கேர்ள் படத்தின் ட்ரெய்லர் இதோ:

Also Read… லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் இன்னும் இருக்கு… லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ஃபர்ஸ்ட் பஞ்ச் இதோ!