SJ. Suryah: சியான் விக்ரமின் நடிப்புத் திறமையை கண்டு வியந்தேன் – வெளிப்படையாக பேசிய எஸ்.ஜே. சூர்யா!

SJ Suryah About Chiyaan Vikrams Acting Magic : தமிழில் பிரபல கதநாயகனாகவும், இயக்குநராகவும் பிரபலமானவராக இருந்துவருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் முன்னதாக நேர்காணல் ஒன்றில், நடிகர் சியான் விக்ரமின் நடிப்பை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

SJ. Suryah: சியான் விக்ரமின் நடிப்புத் திறமையை கண்டு வியந்தேன் - வெளிப்படையாக பேசிய எஸ்.ஜே. சூர்யா!

எஸ்.ஜே. சூர்யா மற்றும் சியான் விக்ரம்

Published: 

22 Feb 2026 08:27 AM

 IST

தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகராக ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டுவருபவர் எஸ்.ஜே.சூர்யா (SJ. Suryah). இவர் தமிழில் அஜித் குமாரின் (Ajith Kumar) வாலி (Vaalee) என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக நுழைந்தார். இதற்கு முன் படங்களில் அங்கீகரிக்கப்படாத வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வாலி படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்த இவர், முதல் படத்திலே மக்கள் மத்தியில் இயக்குநராக வரவேற்கப்பட்டார். இப்படத்தின் வெற்றியை அடுத்தாக எஸ்.ஜே.சூர்யா, தளபதி விஜய்யுடன் (Thalapathy VIjay) குஷி (Kushi) என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தின் மூலம் மேலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்க தெலுங்கிலும் படங்களை இயக்கியிருந்தார். இதையடுத்து தனது இயக்கத்திலே கதாநாயகனாகவும் தமிழில் நுழைந்தார். இதையடுத்து, படங்களில் கதாநாயகனாகவும், முக்கிய வேடங்களிலும் நடித்துவந்தார். அந்த வகையில் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்குநராக கில்லர் (Killer) என்ற படத்தை இயக்கிவருகிறார்.

இதில் இவரே கதாநாயகனாக நடிக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துவருகிறார். இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, நடிகர் சியான் விக்ரமின் (Chiyaan Vikram) நடிப்பு குறித்த வியந்த தருணம் குறித்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இரு முகன் இயக்குநருடன் மீண்டும் இணையும் சியான் விக்ரம்?

தனது கில்லர் திரைப்படம் குறித்து எஸ்.ஜே. சூர்யா வெளியிட்ட எக்ஸ் பதிவு:

சியான் விக்ரமின் நடிப்பு குறித்து பேசிய எஸ்.ஜே.சூர்யா :

அந்த நேர்காணலின்போது பேசிய எஸ்.ஜே. சூர்யா, “நான் விக்ரம் சாரை சில முறையே நேரில் சந்தித்திருக்கிறேன். நான் அவருடன் மிக நெருங்கியவனும் கிடையாது. ஒருமுறை விமானத்தில் அவருடன் வரும்போது, பல விஷயங்களை பேசிக்கொண்டு வந்தேன். அப்போது அவரிடம் நான் பேசியபோது, “தெய்வ திருமகள் படத்தில் எப்படி சார், அப்படி நடிச்சீங்கன்னு கேட்டேன்?”. அவர் கொஞ்சம் கூட தாமதிக்காமல், 5 நொடிகளில் அந்த கதாபாத்திரத்தை நேரில் காட்டிவிட்டார். எனக்கு அது பயங்கர ஷாக்காக இருந்தது. யாராலும் அவ்வாறு ஒரு கதாபாத்திரத்தை சில நொடிகளில் தனக்குள் கொண்டுவருவது கடினம்.

இதையும் படிங்க: வாடிவாசல் படம் 100% நடக்கும் – மௌனம் பேசியதே தயாரிப்பாளர்

எனக்கு கண்முன்னே ஒரு மேஜிக் பார்த்தது போலவே இருந்தது. நான் உண்மையாகவே சொல்கிறேன், அதற்கு முன்னாள் அவர் மீது மரியாதையை இருந்தது, அதை அவர் செய்தபிறகு, அது இன்னும் 10 மடங்கு அதிகமாகிவிட்டது. மேலும் ஐ படத்தில் அவர் செய்த விஷயத்தையும் பாராட்டத்தான் வேண்டும். அவரை தவிர நிச்சயமாக வேறு யாரும் அந்த படத்தில் நடிக்கமாட்டேன்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

Related Stories
13 வருசம் ஆகியிருக்கு முதல் வரிசைக்கு வர… ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் சிவகார்த்திகேயனின் நெகிழ்ச்சிப் பேச்சு
70வது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் வெற்றிப் பெற்ற தமிழ் பிரபலங்கள் யார் யார்? லிஸ்ட் இதோ
சீரியல் ரசிகர்களே தயாரா? விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பழைய சீரியல்கள்.. என்னென்ன தெரியுமா?
ஹாரர் காமெடியில் ஒரு படம் பார்க்கணுமா? நெல்லிக்கம்போயில் நைட் ரைடர்ஸ் படத்தை ஓடிடியில் மிஸ் செய்யாதீர்கள்!
மீண்டும் இணையும் பிரதீப் ரங்கநாதன் – அஷ்வத் மாரிமுத்து கூட்டணி – டிராகன் 2 படம் உறுதி!
ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் – வைரலாகும் தகவல்
ஒரு மில்லியன் ரீல்ஸ் - அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் கொண்டாட்டம்
நடிகர் சல்மான் கானின் தந்தை மருத்துவமனையில் அனுமதி
ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா - வெளியான பரபரப்பு தகவல்
கார்திக் சுப்புராஜ் படத்தில் நடிகர் சுஹாஸ்!