யாருன்னு கண்டுபிடிங்க… கில்லர் படம் குறித்து புதிய அப்டேட்டை வெளியிட்ட எஸ்.ஜே.சூர்யா

SJ Surya: தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்து பின்பு சூப்பர் ஹிட் இயக்குநராக மாறியவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் கடந்த சில ஆண்டுகளாக படங்களை இயக்குவதில் இருந்து விலகி முழு நேரமும் நடிகராக மாறினார். இவர் கால் சீட் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.

யாருன்னு கண்டுபிடிங்க... கில்லர் படம் குறித்து புதிய அப்டேட்டை வெளியிட்ட எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே.சூர்யா

Published: 

06 Jul 2025 10:46 AM

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை சிறந்த இயக்குநர்கள் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பலர் தற்போது படங்களை இயக்குவதை ஓரமாக வைத்துவிட்டு தொடர்ந்து நடிகராக நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் கோலிவுட் சினிமாவில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக படங்களை இயக்குவதில் இருந்து விலகி நடிகராக வலம் வந்தார் எஸ்.ஜே.சூர்யா (Director SJ Suryah). இந்த நிலையில் சமீபத்தில் தான் மீண்டும் படங்களை இயக்க உள்ளதாக அறிவித்தது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து படத்தின் பூஜை நடைப்பெற்றது. அதில் அவர் இயக்கு நடிக்க உள்ள படத்திற்கு கில்லர் என்று பெயரிடப்பட்டதாகவும், அந்தப் படத்தில் நாயகியாக நடிகை பிரீத்தி அஸ்ரானி இணைந்து இருப்பது குறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மேலும் எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்க உள்ள இந்த கில்லர் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கோகுலம் மூவிஸ் சார்பாக தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் தயாரிக்க உள்ள இந்தப் படம் குறித்த புதிய அப்டேட்டை எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டுள்ளார். அதில் இந்தப் படத்திற்கு யார் இசையமைக்க உள்ளார் என்பது குறித்த அறிவிப்பை வருகின்ற ஜூலை மாதம் 7-ம் தேதி 2025-ம் ஆண்டு அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கில்லர் படம் குறித்து புதிய அப்டேட்டை வெளியிட்ட எஸ்.ஜே.சூர்யா:

நடிகர் எஸ்.ஜே.சூர்யா தென்னிந்திய சினிமாவில் கொண்டாடப்படும் நடிகராக மாறியது எப்படி:

தமிழ் சினிமாவில் பெரிய நடிகராக சாதித்துவிட வேண்டும் என்ற கனவுடன் வந்து கானாமல் போனவர்கள் பலர். சிலருக்கு மட்டுமே அந்த கனவு சாத்தியமாகி உள்ளது. அப்படி தனது கடின உழைப்பால் தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்தியா சினிமா வரை தன்னை ஒரு சிறந்த நடிகராக தற்போது நிலைநிறுத்தி உள்ளவர் எஸ்.ஜே.சூர்யா.

1988-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் பெயரிடப்படாத கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த எஸ்.ஜே.சூர்யா இப்படியே இருந்தால் தான் ஒரு பெரிய நடிகராக மாற முடியாது என்பதை புரிந்துகொண்டு இயக்குநராக தன்னை முதலில் அறிமுகம் செய்துக்கொண்டு பிறகு நாயகனாக மாறலாம் என்று முடிவு செய்துள்ளார். அதன்படி 1999-ம் ஆண்டு நடிகர் அஜித் குமார் இரட்டை வேடங்களில் நடித்த வாலி படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார்.

அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக விஜயை வைத்து குஷி படத்தை இயக்கினார். பின்பு கோலிவுட்டில் 2004-ம் ஆண்டு தான் இயக்கிய நியூ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். படத்தின் கதை மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பால் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. பின்பு தமிழில் 3 படங்களை இயக்கி தானே நாயகனாகவும் நடித்தார்.

இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டிற்கு பிறகு படங்களை இயக்குவதில் இருந்து விலகி முழு நேர நடிகராக மறினார். தொடர்ந்து தமிழ் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் சக்கைபோடு போட்டு வருகிறார் எஸ்.ஜே.சூர்யா.