SJ Suryah: ரீ- ரிலீசாகும் எஸ்.ஜே. சூர்யாவின் ‘நியூ’ திரைப்படம்.. எப்போது தெரியுமா?

SJ Suryah's New Movie Re-Release: தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநர் மற்றும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் எஸ்.ஜே. சூர்யா. இவரின் முன்னணி நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான படம் நியூ. இந்நிலையில், இந்த படமானது சுமார் 22 வருடங்களுக்கு பின் ரீ- ரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

SJ Suryah: ரீ- ரிலீசாகும் எஸ்.ஜே. சூர்யாவின் நியூ திரைப்படம்.. எப்போது தெரியுமா?

எஸ்.ஜே. சூர்யா மற்றும் சிம்ரனின் நியூ படம்

Published: 

21 Sep 2025 22:00 PM

 IST

கோலிவுட் சினிமாவில் ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துவந்தவர் எஸ்.ஜே. சூர்யா (SJ. Suryah) . பின் தனது திறமையால் சினிமாவில் இயக்குநராகவும் வளர தொடங்கினர். நடிகர் அஜித் குமாரின் (Ajith Kumar) நடிப்பில் கடந்த 1999ம் ஆண்டு வெளியான வாலி (Vaalee) என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் அஜித் குமார் ரெட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். இதில் அஜித் குமாருக்கு ஜோடியாக சிம்ரன் (Simran) நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யின்(Thalapathy Vijay) நடிப்பில் வெளியான, “குஷி” (Kushi) என்ற படத்தையும் எஸ்.ஜே. சூர்யா இயக்கியிருந்தார். தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் இயக்குநராக அறிவுக்கமானார். அந்த வகையில் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் உருவாக்கப்பட்ட படம்தான் நியூ (New).

இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா இயக்கி, அதிலே கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இதில் அவருடன் நடிகைகள் சிம்ரன் மற்றும் தேவயானி இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த 20004ம் ஆண்டு வெளியான நிலையில், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எஸ்.ஜே. சூர்யா, இந்த நியூ திரைப்படமானது ரீ- ரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சார்பட்டா பரம்பரை பார்ட் 2 கதைக்களம் இப்படிதான் இருக்கும் – பா. ரஞ்சித் கொடுத்த அப்டேட்!

எப்போது ரீ ரிலீஸ் ஆகிறது எஸ்.ஜே. சூர்யாவின் நியூ படம் :

இந்த நியூ திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, பப்பு மற்றும் விச்சு என இரு வேடத்தில் நடித்திருந்தார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்திருந்தார். இந்த படமானது மாறுபட்ட நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த 2025ம் ஆண்டுடன் இந்த படமானது வெளியாகி 21 வருடங்கள் நிறைவடைந்துள்ளனர்.

இதையும் படிங்க : கட்டிப்புடி கட்டிப்புடி டா பாடல் இப்படிதான் உருவாச்சு – எஸ்.ஜே.சூர்யா சொன்ன சுவாரஸ்ய சம்பவம்

இந்நிலையில், சமீபத்தில் குஷி படத்தின் ரீ- ரிலீஸ் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட எஸ்.ஜே. சூர்யா, நியூ படத்தை ரீ ரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த படத்தை வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட உள்ளதாக அப்டேட் கொடுத்துள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

கில்லர் படம் தொடர்பாக எஸ்.ஜே. சூர்யா வெளியிட்ட பதிவு :

நடிகர் எஸ்.ஜே. சூர்யாவின் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பின் மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். கில்லர் என்ற படத்தை இயக்கி, அவரே அதில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

இந்த படத்தை கோகுலம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, எஸ்.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நடித்து வருகிறார். இப்படமானது முழுவதும் ஆக்ஷ்ன் மற்றும் காதல் கதைக்களத்துடன் கூடிய படமாக தயாராகிவருகிறதாம்.