Parasakthi: அமரன் படம்போல பராசக்தி படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி? ரசிகர்களுக்கு காத்திருக்கும் சுவாரஸ்ய தகவல்!

Parasakthi Climax Details: தமிழ் சினிமாவில் பிரபலமான ஒருவராக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் படம்தான் பராசக்தி. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக தொடங்கிய நிலையில், தற்போது இப்படத்தின் க்ளைமேக்ஸ் தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Parasakthi: அமரன் படம்போல பராசக்தி படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி? ரசிகர்களுக்கு காத்திருக்கும் சுவாரஸ்ய தகவல்!

பராசக்தி

Published: 

05 Dec 2025 20:13 PM

 IST

நடிகர் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம்தான் பராசக்தி (Parasakthi). இந்த திரைப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்க, டான் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கிய நிலையில், இந்த 2025 அக்டோபர் மாதத்தோடு ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் லீட் கதாநாயகியாக நடிக்க, நடிகை ஸ்ரீலீலா (Sreeleela)அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.  இவர், இப்படத்தின் மூலம் தமிழில் கதநாயகியாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar) இசையமைத்துள்ளார், இது அவரின் இசையமைப்பில் உருவாகியுள்ள 100வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தையும் மிகவும் ஸ்பெஷலாக இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: தி கோர்ட் பட நடிகையின் புது தமிழ் படம்.. வெளியானது டைட்டில் லுக் போஸ்டர்!

அமரன் திரைப்படத்தை போலவே பராசக்தி படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி :

இந்த பராசக்தி திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் அமரன் திரைப்படத்தை போலவே மிகவும் எமோஷனலாக அமைந்துள்ளதாம் இப்படம் உண்மையான கதையில் உருவாகியுள்ள என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் இப்படத்தில் இறந்துவிடுவார் என்பது உண்மை. இப்படத்தில் அதர்வா மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் கல்லூரி மாணவர்களாக நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: ரிலீஸ் தேதியில் மாற்றமில்லை.. ரசிகர்களை குஷிப்படுத்திய வா வாத்தியார் படக்குழு!

மேலும் நடிகர் ரவி மோகன் வில்லன் வேடத்தில் , இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் க்ளைமேக்ஸ் கடைசியில் ரவி மோகன் சிவகார்த்திகேயனை துப்பாக்கியை சுட்டுவிடுவார். இதுதான் இந்த படத்தின் அறிவிப்பு வீடியோவில் படக்குழு காட்டியிருந்தது. மேலும் இப்படத்தின் மற்றொரு முக்கிய வேடத்தில் பிரபல நடிகர் நடித்துள்ளார் அவர் வேறு யாருமில்லை நடிகர் ராணா தான் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

பராசக்தி படக்குழு வெளியிட்ட ரத்னா மாலா பாடல் பதிவு :

இந்த பராசக்தி பாடத்தின் இறுதிக்கட்ட வேலைகளும் முடிந்த நிலையில், ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதியில் நடைபெறவுள்ளதாகவும், அன்றே இப்படத்தின் ட்ரெய்லரும் வெளியாகிவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஓய்வு குறித்து முதன்முறையா மனம் திறந்த கமல்ஹாசன்!
ஸ்மிருதி மந்தானா மற்றும் பலாஷின் திருமணம் - நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரின் இன்ஸ்டாகிராம் பதிவால் சர்ச்சை
முகேஷ் அம்பானி தினமும் ரூ.5 கோடி செலவழித்தால், அவரது சொத்து காலியாக எவ்வளவு நாட்களாகும்?
இனி ரயில்களில் சாதாரண ஸ்லீப்பர் கிளாஸிலும் தலையணை போர்வை கிடைக்கும்