13 வருசம் ஆகியிருக்கு முதல் வரிசைக்கு வர… ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் சிவகார்த்திகேயனின் நெகிழ்ச்சிப் பேச்சு

Sivakarthikeyan speech at Filmfare award function : கேரளாவில் நடைப்பெற்ற ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அமரன் படத்திற்காக விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

13 வருசம் ஆகியிருக்கு முதல் வரிசைக்கு வர... ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் சிவகார்த்திகேயனின் நெகிழ்ச்சிப் பேச்சு

சிவகார்த்திகேயன்

Published: 

22 Feb 2026 11:31 AM

 IST

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பராசக்தி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் சேயோன் என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் சிவக்குமார் முருகேசன் எழுதி இயக்கி வருகிறார். கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார்.

இந்த நிலையில் நேற்று கேரளாவில் நடைப்பெற்ற 70-வது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் தென்னிந்திய சினிமாவில் உள்ள பலருக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தமிழ் சினிமாவில் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான அமரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. அந்த விருதை நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நடிகை சிம்ரன் வழங்கினார். இதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்தியேன் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

13 வருசம் ஆகியிருக்கு முதல் வரிசைக்கு வர:

இந்த விருதை வாங்கியப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, இதுதான் எனது முதல் ஃபிமில் ஃபேர் விருது. 13 வருசத்திற்கு முன்பு நடிகர் தனுஷ் சாரோட இந்த விழாவிற்கு வந்தேன். அவர்தான் வா ஜாலியா போய்ட்டு வருவோம்னு கூட்டிட்டு வந்தார். அப்போ எனக்கு இரண்டாவது வரிசையில் தான் சீட் கொடுத்தார்கள். இந்த விழாவில் முதல் வரிசையில் உள்ள சீட்டில் அமர்வதற்கு 13 வருடங்கள் ஆகியுள்ளது என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மேலும் அமரன் படம் எனக்கு நிறைய விருதுகளை பெற்றுத் தந்துள்ளது. இந்த ஃபிலிம் ஃபேர் விருதையும் அமரன் எனக்கு கொடுக்கும் என்று நினைத்தேன். அதுவும் எனக்கு கிடைத்துவிட்டது என்று அந்த விருது விழாவில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… டியூட் பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் அடுத்து இயக்க உள்ளது இந்த பிரபல நடிகரா? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் சிவகார்த்திகேயன் பேச்சு:

Also Read… ஆமா யார் ஹீரோ? வெளியானது கமல் ஹாசன் – ரஜினிகாந்த் படத்தின் புரோமோ வீடியோ!

Follow Us
Related Stories
Kayadu Lohar: ஐஆம் கேம் படம் முற்றிலும் வித்தியாசமானது.. நிச்சயம் அனைவர்க்கும் பிடிக்கும் – கயாடு லோஹர் பேச்சு!
Hi Movie: நயன்தாரா – கவின் நடிக்கும் ஹாய் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழு அறிவிப்பு!
அவன் குறுக்க மட்டும் போயிடாதீங்க சார் – 4 ஆண்டுகளை நிறைவு செய்தது கேஜிஎஃப் சாப்டர் 2 படம்
சரி என்று தெரியாமல் தவறு என்று புரியாமல் எதில் வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான் – 19 ஆண்டுகளை நிறைவு செய்தது உன்னாலே உன்னாலே படம்
GV Prakash: ஜோ பட இயக்குநரின் புது படத்தில் இணைந்த ஜி.வி. பிரகாஷ்.. நடிகை யார் தெரியுமா?
புத்தாண்டை முன்னிட்டு குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்