Sivakarthikeyan: ரவி மோகன் சார் வெரி வெரி பேட் பாய்.. நிகழ்ச்சியில் கலகலப்பாக பேசிய சிவகார்த்திகேயன்!
Sivakarthikeyan About Ravi Mohans Real Character: ரவி மோகன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் பராசக்தி. இந்த படமானது வரும் 2026 ஜனவரி 10ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் கேரளாவில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின்போது, ரவி மோகன் குறித்து சிவகார்த்திகேயன் பேசிய விஷயம் ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.

சிவகார்த்திகேயன் மற்றும் ரவி மோகன்
சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் பராசக்தி (Parasakthi). இந்த இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்க, டான் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் (GV. Prakash) இசையமைத்துள்ள நிலையில், இது அவரின் 100வது திரைப்படமாகும். அந்த வகையில் மிகவும் சிறப்பாக இந்த திரைப்படமானது தயாராகியுள்ள நிலையில், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்திவருகிறது. இதில் சிவகார்த்திகேயனுடன் நடிகர்கள் ரவி மோகன்(Ravi Mohan), அதர்வா (Athrvaa), ஸ்ரீலீலா (Sreeleela), பேசில் ஜோசப் மற்றும் ராணா உட்பட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது உண்மை கதையை மையமாக கொண்டு, இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான கதைக்களத்தில் தயாராகியுள்ளது.
இந்த படம் 2026 ஜனவரி 10ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கேரளாவில் கல்லூரி ஒன்றில் நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்ச்சியில் படக்குழுவினரும் கலந்துகொண்டிருந்தனர். அதில் மேடையில் பேசிய சிவகார்த்திகேயன், ரவி மோகனின் கதாபாத்திரம் குறித்து கலகலப்பாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க: துல்கர் சல்மானிடம் ஒரு காதல் கதை சொன்னேன்… ஆனால் – சுதா கொங்கரா ஓபன் டாக்
ரவி மோகன் குறித்து மேடையில் கலகலப்பாக பேசிய சிவகார்த்திகேயன்:
அந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன், “ரவி மோகன் சார் நிஜத்தில் ரொம்பவே இனிமையானவர். ஆனால் இந்த படத்தில் வெரி வெரி பேட் பாய். நான் அவரை பேட் பாய் என சிம்பிளாக சொல்லுறேன்னு நினைக்காதீங்க, அவர் பேடோ பேட் பாய். அவரின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என நீங்க பராசக்தி படத்தை பார்த்தால்தான் தெரியும். ஆனால் படத்தில் அவரின் காட்சிகள் முடிந்ததும், அப்படியே சாதாரணமாக மாறிவிடுவார்.
இதையும் படிங்க: ஜன நாயகன் சென்சார் பிரச்சனை… தளபதி விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய கோலிவுட் சினிமா
மேலும் ஷூட்டிங்கின்போது, எனது காட்சிகள் சரியாக வந்திருக்கிறதா, எனது கதாபாத்திரம் ரொம்பவே மோசமானவன். எப்போதுமே என்னிடம் கேட்டுக்கொண்டே இருப்பார், மேலும் நம்ம பேசிக்கொண்டு இருப்பது தற்போது கேரளா, இந்த கேரளாவில் எப்படி நடித்தால் நம்மை எந்த இடத்திற்கு கொண்டு போவார்கள் என தெரியும். அது நிச்சயமாக உங்களுக்கு கிடைக்கும் சார்” என அதில் சிவகார்த்திகேயன் பேசியிருந்தார்.
ரவி மோகன் குறித்து சிவகார்த்திகேயன் பேசிய வீடியோ பதிவு :
#Sivakarthikeyan about #RaviMohan :
“He’s very very bad boy.. You’ll know when you watch the film.. But he’s very sweet in real.. We know how much respect we get in Malayalam if we act well.. You are gonna get that respect sir..”🤝💥pic.twitter.com/S0wS7Ow8jw
— Laxmi Kanth (@iammoviebuff007) January 8, 2026
இந்த பராசக்தி படமானது 2026 ஜனவரி 10ம் தேதியில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ளது. மேலும் இப்படத்திற்கு முன் வெளியாகவிருந்த ஜன நாயகன் படம் சென்சார் பிரச்சனையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்னும் பராசக்தி படத்திற்கும் இன்னும் சென்சார் சான்றிதழ் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.