Sivakarthikeyan : தளபதி விஜய் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது – சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan About Thalapathy Vijay : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் தமிழில் பல படங்கள் வெளியாகி மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தளபதி விஜய்யுடன் கோட் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார்.

Sivakarthikeyan : தளபதி விஜய் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது - சிவகார்த்திகேயன்!

தளபதி விஜய் மற்றும் சிவகார்த்திகேயன்

Published: 

04 Aug 2025 18:10 PM

நடிகர் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் அமரன் (Amaran). இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில், நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இவர் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) தி கோட் (The GOAT) படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். தளபதி விஜய்யின் நடிப்பிலும், இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்திலும் வெளியான இப்படமானது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று ஹிட் திரைப்படமாக அமைந்திருந்தது. இந்த படத்தில் தளபதி விஜய், நடிகர் சிவகார்த்திகேயனுக்குத் துப்பாக்கி கொடுக்கும் காட்சியானது இன்று வரையிலும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

இந்த படத்தை அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் மதராஸி (Madharaasi) மற்றும் பராசக்தி (Parasakthi) போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயனிடம், கோட் படத்தில் தளபதி விஜய் துப்பாக்கியைக் கொடுக்கும் காட்சிகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த சிவகார்த்திகேயன், “தளபதி விஜய்யின் இடத்தை யாராலும் மாற்ற முடியாது” எனக் கூறியிருந்தார். மேலும் அந்த காட்சியில் நடித்தது குறித்தும் பேசியிருந்தார்.

இதையும் படிங்க : லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் எஸ்.எஸ்.ராஜமௌலி.. – ரஜினிகாந்த் அதிரடி!

தளபதி விஜய்யை பற்றி சிவகார்த்திகேயன் பேசிய விஷயம் :

அந்த நேர்காணலில் பேசிய சிவகார்த்திகேயன், ” அந்தக் காட்சி நடித்தபோது நான் மிகவும் என்ஜாய் பண்ணினேன், மேலும் அது திரையில் வந்தபோதும் அதை ரசித்தேன். விஜய் சார் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக மக்களை அவரை மகிழ்வித்தது வருகிறார். அதை யாராலும் மற்ற முடியாது. யாராலும் விஜய் சார் இடத்தை நிரப்பவும் முடியாது.

இதையும் படிங்க : மாளவிகா மோகனனின் பிறந்தநாள்.. ‘சர்தார் 2’ படக்குழு வெளியிட்ட போஸ்டர் வைரல்!

மேலும் எனது படங்களையும் அவர் 13 வருடங்களுக்கும் மேலாகக் கவனித்து வருகிறார். அவருடன் நடிக்கும்போது அவர் என்னை சப்போர்ட் செய்தது போல இருந்தது. மேலும் அவர் என்னிடம் நீங்கள் நன்றாக நடிக்கிறீர்கள், இதைத் தொடருங்கள் என்று விஜய் சார் கூறினார்” என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார். இந்த தகவலானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன், தளபதி விஜய் குறித்து பேசிய வீடியோ :