Sivakarthikeyan: தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கம்.. தவெக கட்சி தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan Wishes Thalapathy Vijay: கோலிவுட் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன். இன்று (04/05/2026) நடைபெற்றுவரும் 2026 சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தவெக கட்சி தலைவர் தளபதி விஜய் முன்னிலை வகிக்கும் நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்து சிவகார்த்திகேயன் பதிவை வெளியிட்டுள்ளார்.

Sivakarthikeyan: தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கம்.. தவெக கட்சி தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்!

தளபதி விஜய்க்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து

Updated On: 

04 May 2026 16:41 PM

 IST

நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் பிரபல நடிகராக இருந்துவருகிறார். இவர் தமிழில் இறுதியாக பராசக்தி (Parasakthi) என்ற படத்தில் நடித்திருந்த நிலையில், அது மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. அதையடுத்து தற்போது சேயோன் (Seyon) என்ற படத்தில் நடித்துவருகிறார். இவர் கடந்த 2024ம் ஆண்டில் நடிகரும், தவெக கட்சி தலைவருமான தளபதி விஜய் (Thalapathy Vijay) நடித்திருந்த தி கோட் (The GOAT) படத்தில் கேமியோ வேடத்தில் நடித்திருந்தார். அதில் விஜய் , சிவகார்த்திகேயனுக்கு துப்பாக்கியை கொடுக்கும் காட்சியானது மக்கள் மத்தியில் சிறப்பாக வரவேற்பை பெற்றிருந்தது. அதன் பிறகு விஜய் ரசிகர்கள் மத்தியில் சிவகார்த்திகேயனுக்கு ஒரு வரவேற்பு இருந்தது என்று கூறலாம்.

அனாலும் சில காரணங்கால் சிவகார்த்திகேயன் பெரும் விமர்சனங்களுகு உள்ளானார். அந்த வகையில் இன்று 2026 மே 4ம் தேதியில் நடைபெற்றுவரும் 2026 சட்டமன்ற வாக்கு எண்ணிக்கையில் தவெக கட்சி தலைவர் விஜய் முன்னிலை வகிக்கிறார். அந்த வகையில் அவரை வாழ்த்தி, நடிகர் சிவகார்த்திகேயன் எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: விஜய் நிச்சயம் மக்களுக்காக பெரிய மாற்றத்தை கொண்டுவருவார் – எஸ்.ஏ.சந்திரசேகர்!

தவெக தலைவர் தளபதி விஜயை வாழ்த்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த பதிவில் சிவகார்த்திகேயன், “தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இந்த வெற்றியை பெற்றிருக்கும் விஜய் சாருக்கு வாழ்த்துகள் என்றும், நீங்கள் திரைத்துறையில் பயணித்தவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சியாக இருப்பதாகவும்” சிவகார்த்திகேயன் அந்த பதிவில் தெரிவித்திருந்தார். நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய்க்கு பல்வேறு நட்சத்திர நடிகர்கள் மற்றும் மற்ற மாநில அரசியல்வாதிகளும் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகிறார்கள்.

இதையும் படிங்க:  இயக்குநர்கள் சர்ச்சையில் இருக்கும் தலைவர் 173 படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்க்கு மத்தியில் நல்ல ஒரு நட்புறவு இருப்பதாக கூறப்படுகிறது. பராசக்தி படத்தின் ரிலீஸ் நிகழ்ச்சியின்போதும் பராசக்தி படம், ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தேதியில் வெளியாகுவதாக விஜய்யிடம் சிவகார்த்திகேயன் தெரிவித்ததாகவும், அதற்கு விஜய் ஒரு பிரச்னையும் இல்லை, படத்தை வெளியிடுங்கள் என சொன்னதாகவும், சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார். ஆனால் விஜய்யின் ஜன நாயகன் படமானது குறிப்பிட்ட தேதியில் வெளியாகாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..