Sivakarthikeyan: தலைவா… ரீ ரிலீஸில் படையப்பா படத்தைப் பார்த்த சிவகார்த்திகேயன்.. வைரலாகும் வீடியோ!

Sivakarthikeyan celebrate Padaiyappa Re-release: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்கள் பட்டியலில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் பராசக்தி வெளியாகி காத்திருக்கிறது. இந்நிலையில் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு படையப்பா படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. இப்படத்தை திரையரங்கில் பார்த்த சிவகார்த்திகேயன் கொண்டாடிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Sivakarthikeyan: தலைவா... ரீ ரிலீஸில் படையப்பா படத்தைப் பார்த்த சிவகார்த்திகேயன்.. வைரலாகும் வீடியோ!

படையப்பா படத்தை கொண்டாடிய சிவகார்த்திகேயன்

Published: 

16 Dec 2025 17:48 PM

 IST

நடிகர் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடந்து திரைப்படங்ககள் வெளியாகி வருகிறது. அமரன் (Amaran) படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான இவர், தற்போது பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். இவரின் நடிப்பில் இறுதியாக மதராஸி (Madharaasi) என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த படம் கடந்த 2025 செப்டம்பர் 5ம் தேதியில் வெளியாகியிருந்த நிலையில், ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்த நிலையில், அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக இயக்குநர் சுதா கொங்கராவின் (Sudha Kongara) இயக்கத்தில் பராசக்தி (Parasakthi) என்ற படத்தில் ஒப்பந்தமாகி நடிக்க தொடங்கிவிட்டார். இந்த படமானது உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவருகிறது.

கடந்த 2025 டிசம்பர் 12ம் தேதியில் ரஜினிகாந்தின் (Rajinikanth) பிறந்தநாளை முன்னிட்டு, எப்போதும் சலிக்காத படமான படையப்பா (padaiyappa) படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தை திரையரங்கு சென்று பார்த்த சிவகார்த்திகேயன், சிறப்பாக பார்த்து கொண்டாடிய வீடியோவானது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: சிலம்பரசன் – அஸ்வத் மாரிமுத்து படம் இப்படிதான் இருக்கும்… தயரிப்பாளர் ஓபன் டாக்

சிவகார்த்திகேயன் படையப்பா படம் பார்த்து கொண்டாடிய வைரல் வீடியோ :

நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படையப்பா படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. படையப்பா படமானது வெளியாகி 25 ஆண்டுகளை கடந்த நிலையில், ரீ ரில்சி செய்யப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டிருந்தது. இந்நிலையில் இதை நடிகர் சிவகார்த்திகேயனும் தனது நண்பர்களுடன் இணைந்து திரையரங்கு சென்று பார்த்துள்ளார். தலைவர் ரஜினிகாந்தின் ஒரிஜினல் ரசிகராக அவர் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

பராசக்தி படத்தின் அப்டேட் :

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் 25வது படமாக உருவாகியிருப்பது பராசக்தி. இப்படம் வரும் 2026ம் ஆனது ஜனவரி 14ம் தேதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிகர்கள் ரவி மோகன், ஸ்ரீலீலா மற்றும் அதர்வா உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: விஜய்க்கு அரசியல் வர பல காரணங்கள் இருக்கலாம்…ஆனால் அதுவும் ஒரு காரணம்- எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு!

அதிரடி உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் க்ளைமேக்சில் இறந்துவிடுவார் என்பது குறிப்பிடத்தத்க்கது. தற்போது இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகிவரும் நிலையில், வரும் 2025 டிசம்பர் 18ம் தேதியில் இப்படத்தின் முதல் 10 நிமிட காட்சிகள் வெளியிடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எச்1பி விசாதாரர்களின் கணவன், மனைவிகளை பாதிக்கும் அமெரிக்க அரசின் புதிய விதி - செனட்டர்கள் எதிர்ப்பு
சீன எல்லையில் விபத்துக்குள்ளான லாரி - 21 பேர் பலி
பீகாரில் ரயிலில் பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்
பெங்களூரு ஆட்டோ ஓட்டுநரின் செயலால் நெகிழ்ந்த பெண்