சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் எஸ்டிஆர் 49 படத்தின் ஷூட்டிங் எப்போது?

STR 49 Movie Update: நடிகர் சிலம்பரசன் தனது 49-வது படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறன் உடன் கூட்டணி வைத்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் எஸ்டிஆர் 49 படத்தின் ஷூட்டிங் எப்போது?

சிம்பு

Updated On: 

28 Jul 2025 12:01 PM

 IST

நடிகர் சிலம்பரசன் ( Actor Silambarasan) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் தக் லைஃப். இயக்குநர் மணிரத்னம் (Director Maniratnam) இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசனும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் நடிகர்கள் அபிராமி, அசோக் செல்வன், த்ரிஷா கிருஷ்ணன், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி நாசர், வடிவுக்கரசி என பலர் நடித்து இருந்தனர். இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. மேலும் ஓடிடியில் வெளியான பிறகும் படம் பல ட்ரோல்களை சந்தித்தது. படம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்றாலும் நடிகர் சிலம்பரசனின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது தனது அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக பணியற்றி வருகிறார் சிம்பு.

அதன்படி தனது 49-வது படத்திற்காக நடிகர் சிம்பு இயக்குநர் வெற்றிமாறன் உடன் கூட்டணி வைத்துள்ளார். இந்த கூட்டணி குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியான போது ரசிகர்கள் கொண்டாடித்தீர்த்தனர். மேலும் விடுதலை பாகம் இரண்டிற்கு பிறகு இயக்குநர் வெற்றிமாறன் சூர்யாவின் நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்குவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்தப் படத்தின் பணிகள் தாமதம் ஆன காரணத்தால் தற்போது நடிகர் சிம்புவின் 49-வது படத்தை இயக்க இயக்குநர் வெற்றிமாறன் தயாராகிவிட்டார்.

சிம்புவின் எஸ்டிஆர் 49 படத்தின் ஷூட்டிங் அப்டேட்:

வட சென்னையை மையமாக வைத்து உருவாக உள்ள இந்தப் படத்தின் கதை முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தின் காலத்தில் பார்லலாக நடைபெறுவதுபோல இருக்கும் என்று தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

வடசென்னை பகுதியைமையமாக வைத்து இந்தப் படம் உருவானாலும் இது வடசென்னை பாகம் 2 இல்லை என்பதை இயக்குநர் வெற்றிமாறன் உறுதியாக தெரிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் அடுத்தடுத்த தகவல்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… மதராஸி படம் கஜினி மற்றும் துப்பாக்கி மாதிரி இருக்க வேண்டும் என நினைத்தேன் – ஏ.ஆர்.முருகதாஸ்

அந்த வகையில் முன்னதாக இந்தப் படதிற்கக நடிகர் சிம்பு 10 கிலோ வரை எடை குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் தற்போது படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளதாகவும் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… இதனால்தான் எனது குடும்ப வாழ்க்கையை ரகசியமாக வைத்திருக்கிறேன் – லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்

Related Stories
Jailer 2: கோவாவில் ஜெயிலர் 2 ஷூட்டிங் ஓவர்.. சென்னை திரும்பிய ரஜினிகாந்த்!
D55: தனுஷின் டி55 படத்தில் இவர்தான் ஜோடியா?.. இசையமைப்பாளர் யார் தெரியுமா?
Ajith kumar: நான் நிஜத்தில் இப்படித்தான்.. எனக்கு முன் கோபம் ஜாஸ்தி – அஜித் குமார் பகிர்ந்த விஷயம்!
இது மலையாள சினிமாவில் வெளியான ஒரு ரியல் ஸ்டோரி… பார்வதி நடிப்பில் மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய டேக் ஆஃப் படம்!
Mari Selvaraj: பைசன் படத்தில் அனுபமாவுக்கும் துருவுக்கும் வயது வித்தியாசத்துக்கு காரணம் இதுதான் – மாரி செல்வராஜ்!
Dhruv Vikram: மாரி செல்வராஜ் நடித்து காட்டுவதில் ஒரு வலி தெரிந்தது.. பைசன் படத்திற்கு பின் எல்லாம் மாறிடுச்சு – துருவ் விக்ரம் பேச்சு!