ரீ-ரிலீஸாகும் நடிகர் சிம்புவின் சூப்பர் ஹிட் படம் – உற்சாகத்தில் ரசிகர்கள்

Silambarasan's Superhit Telugu Movie Vallabha Re-released Soon: நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் வல்லபா. இந்தப் படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ரீ-ரிலீஸாகும் நடிகர் சிம்புவின் சூப்பர் ஹிட் படம் - உற்சாகத்தில் ரசிகர்கள்

வல்லபா

Updated On: 

27 Mar 2026 13:59 PM

 IST

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி மக்களின் மனதில் நங்கூரம் போல பதிந்தவர் தான் சிலம்பரசன். இவரது தந்தை டி.ராஜேந்தரின் படங்களில் அதிக அளவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த சிலம்பரசன் பிறகு படங்களில் நாயகனாக நடிக்க தொடங்கினார். இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு சினிமாவில் பல முயற்சிகளை மேற்கொண்டார். அதன்படி தொடர்ந்து சினிமாவில் நாயகனாக மட்டும் இன்றி பாடகர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார். இந்த நிலையில் இவர் எழுதி இயக்கி தமிழ் சினிமாவில் வெளியாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் வல்லவன். இந்தப் படம் தமிழில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வல்லவன் படம் தெலுங்கு சினிமாவில் வல்லபா என்ற பெயரில் வெளியானது.

இந்தப் படத்தில் சிலம்பரசன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை நயன்தாரா நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ரீமா சென், சந்தானம், சந்தியா, சத்யன் மற்றும் பிரேம்ஜி உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். படம் தமிழ் மொழியில் உருவாகி இருந்தாலும் தென்னிந்திய மொழிகளிலும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ரீ-ரிலீஸாகும் நடிகர் சிம்புவின் சூப்பர் ஹிட் படம்:

தமிழ் சினிமாவில் வல்லவன் என்ற பெயரில் வெளியான இந்தப் படம் தெலுங்கு சினிமாவில் வல்லபா என்ற பெயரில் வெளியாகி இருந்தது. ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்த வல்லபா படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி வல்லபா படம் வருகின்ற மே மாதம் 09-ம் தேதி 2026-ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் ரீ ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. முன்னதாக மன்மதன் படம் தமிழில் ரீ ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக தற்போதைய இளைஞர்கள் இந்த மன்மதன் படத்தை திரையரங்குகளில் கொண்டாடித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது.

Also Read… காமெடி ட்ராமா பாணியில் ஒரு தமிழ் வெப் சீரிஸ் பார்க்கனுமா? இந்த லோக்கல் டைம்ஸ் சீரிஸை ஓடிடியில் மிஸ் செய்யாதீர்கள்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ரோம்-காம் பாணியில் வெளியாகியுள்ள ஹேப்பி ராஜ் படம் எப்படி இருக்கு? மக்களின் விமர்சனம் இதோ

Follow Us
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..