அஜித் குமாரை ரேஸ் களத்தில் நேரில் சந்தித்த சிலம்பரசன்.. இரு கோலிவுட் ஸ்டாரின் வீடியோ தற்போது தீயாக பரவல்!
Silambarasan Meet Ajith Kumar: கோலிவுட் சினிமாவில் நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் சிலம்பரசன். இவரின் நடிப்பில் தொடர்ந்து பிரம்மாண்டமான படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில் அவர் இன்று( 2025 டிசம்பர் 06) மலேசியாவில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு சென்ற நிலையில், அஜித் குமாரை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

அஜித் குமார் மற்றும் சிலம்பரசன்
நடிகர் சிலம்பரசனின் (Silambarasan) நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் தக் லைஃப் (Thug Life). இந்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக தற்போது வெற்றிமாறனின் (Vetrimaaran)அரசன் (Arasan) என்ற திரைப்படத்தில் அதிரடி நாயகனாக நடித்துவருகிறார். இந்த படத்தில் சிலம்பரசனுடன், நடிகர் விஜய் சேதுபதி மிக முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, அனிருத் (Anirudh) இசைமைத்துவருகிறார். இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இன்று 2025 டிசம்பர் 6ம் தேதியில் மலேசியாவில் ஒரு நகைக்கடை திறப்பு விழாவில் நடிகர் சிலம்பரசன் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அரசன் படத்தின் ஷூட்டிங் குறித்தும் அவர் அப்டேட் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை முடித்த கையேடு தல அஜித் குமாரை (Ajith kumar) நேரில் சந்தித்துள்ளார். மலேசியாவில் நடிகர் அஜித் குமார் 24H கார் ரேஸ் (24H Car Series) போட்டியில் தீவிரமாக இருந்துவரும் நிலையில், நிகழ்ச்சியில் அஜித் குமாரை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: ஒன்னு ரெண்டு இல்ல.. மொத்தம் 500.. தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட அஜித் குமார்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
சிலம்பரசன் மற்றும் அஜித் குமார் சந்திப்பு தொடர்பாக வைரலாகும் வீடியோ பதிவு :
When the Fanboy #SilambarasanTR met his idol #AjithKumar😍🔥 pic.twitter.com/pXBNoRypKH
— AmuthaBharathi (@CinemaWithAB) December 6, 2025
அஜித்தின் கார் ரேஸ் போட்டி மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியின்போது, அவரை சந்தித்த சிலம்பரசன், அஜித் குமார் டீம் ஜெர்சியை அணிந்துள்ளார். மேலும் அவரை வரவேற்கும் விதத்தில் அஜித் குமார் அவரை, விஐபி இருக்கும் இடத்திற்கு கூட்டி செல்வது போன்ற காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. பல வருடங்களுக்கு பின் அஜித் மற்றும் சிலம்பரசன் நேரடியாக சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மதுரையில் தொடங்கும் அரசன் திரைப்படத்தின் ஷூட்டிங்.. ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்த சிலம்பரசன்!
ஆரம்பத்திலிருந்தே நடிகர் சிலம்பரசன் தீவிர அஜித் குமார் ரசிகன் என்ற நிலையில், அவரின் நடிகரை நேரில் சந்தித்ததில் அவர் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி தெரிகிறது. தற்போது இந்த வீடியோ சிலம்பரசன் மற்றும் அஜித் ரசிகர்களிடையே தீயாக பரவிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிலம்பரசனின் அரசன் திரைப்படத்தின் ஷூட்டிங் :
சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறனின் கூட்டணியில் வட சென்னை பட உலகத்திலிருந்து மற்றொரு கதையாக உருவாகிவரும் படம்தான் அரசன். இந்த படமானது மிக பிரம்மாண்டமாக தயாராகவுள்ள நிலையில், சமீபத்தில் இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்கப்பட்டிருந்தது. மேலும் இந்த படத்தின் பூஜை வரும் 2025 டிசம்பர் 8ம் தேதியிலும், இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2025 டிசம்பர் 9ம் தேதியில் மதுரையில் தொடங்குவதாக சிலம்பரசன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.