கருப்பு படத்தில் பாடியதில் மிகுந்த மகிழ்ச்சி – சூர்யாவிற்கு நன்றி தெரிவித்த சிலம்பரசன்!

Silambarasan thanks Suriya for the Karuppu Movie song : நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள கருப்பு படத்தில் நடிகர் சிலம்பரசன் பாடிய பாடல் நேற்று வெளியான நிலையில் அதற்காக நடிகர் சிலம்பரசன் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கருப்பு படத்தில் பாடியதில் மிகுந்த மகிழ்ச்சி - சூர்யாவிற்கு நன்றி தெரிவித்த சிலம்பரசன்!

சிலம்பரசன்

Published: 

24 Mar 2026 11:06 AM

 IST

நடிகர் சூர்யா நடிப்பில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் கருப்பு. இந்தப் படம் கடந்த 2025-ம் ஆண்டே திரையரங்குகளில் வெளியாக வேண்டிய நிலையில் தொடர்ந்து படத்தின் பணிகள் முடிவடையாத காரணத்தால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. மேலும் படம் இந்த 2026-ம் ஆண்டு தொடங்கியதுமே ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் வெளியாகதது சூர்யா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து இந்த கருப்பு படம் திரையரங்குகளில் எப்போது வெளியாகும் என்று சூர்யாவின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் வருகின்ற மே மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு சூர்யா ரசிகர்களிடையே மாபெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் திரிஷா, இந்திரன்ஸ், நட்டி, மன்சூர் அலிகான், ஸ்வாசிகா, ஷிவதா, அனகா மாயா ரவி, சுப்ரீத் ரெட்டி என பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து தொடர்ந்து பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கருப்பு படத்தில் நாங்க நாளு பேரு பாடலைப் பாடிய சிலம்பரசன்:

கருப்பு படத்தில் நடிகர் சிலம்பரசன் பாடிய நாளு பேரு பாடலின் லிரிக்கள் வீடியோ நேற்று 23-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்தப் பாடலை பாடியது குறித்து நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் நடிகர் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… விறுவிறுப்பாக நடைபெறும் தலைவர் 173 படத்தின் பணிகள்… சமீபத்திய அப்டேட் என்ன தெரியுமா?

சிலம்பரசன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… அரசன் படப்பிடிப்பு தளத்தில் சிம்பு… வைரலாகும் போட்டோஸ்

Follow Us
தூங்கி எழுந்ததும் நீல நிறமாக மாறிய நபர் - என்ன நடந்தது?
ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்.. எழுந்த புதிய சிக்கல்..
உலகின் அருவருப்பான பெண் என அழைத்த மக்கள் - குழந்தைகளுக்கு சிறந்த தாயாக மாறிய பெண்
"தெலுங்கு பேச தடுமாறினேன், பதற்றத்தில் தவறு நடந்துவிட்டது".. மன்னிப்பு கேட்ட பார்த்திபன்..