AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சமைப்பதை சுலபமாகவும் சுவையாகவும் மாற்றும் சூப்பர் கிச்சன் டிப்ஸ்…!

Smart Kitchen Tips to Cook Faster and Tastier Food: சிறிய டிப்ஸ்கள் சமையலை எளிதாக்கும். பூரிக்கு ரவை சேர்த்தால் மொறுமொறு வரும். பருப்பு சீக்கிரம் வேக பூண்டு உதவும். கீரை திறந்த பாத்திரத்தில் சமைக்க வேண்டும். ரசத்தில் நெய் சேர்த்தால் சுவை அதிகரிக்கும். புளித்த மாவால் குழிப்பணியாரம் செய்யலாம்.

சமைப்பதை சுலபமாகவும் சுவையாகவும் மாற்றும் சூப்பர் கிச்சன் டிப்ஸ்…!
சமையலறைImage Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 24 Mar 2026 13:55 PM IST

உணவுப்பொருட்களைச் சமைக்கும்போது சில விஷயங்களை நாம் பின்பற்றினால் அதன் சுவையும், தரமும் மேலும் அதிகரிக்கும். அவை என்னென்ன என்பதை கீழே காணலாம். சமையல் என்பது வெறும் உணவு தயாரிப்பல்ல; அது ஒரு கலை. சிறிய மாற்றங்களும் கூட உணவின் சுவையை பெரிதும் மாற்றக்கூடியவை. குறிப்பாக கீரை, காய்கறி, பருப்பு போன்ற தினசரி உணவுகளில் இந்த சின்ன டிப்ஸ்களை பயன்படுத்தினால், நேரம் சேமிப்பதுடன் சுவையும் மேம்படும். வீட்டில் அனைவரும் விரும்பும் வகையில் சமைப்பது இத்தகைய எளிய முறைகளால் சாத்தியம்.

கீரை மற்றும் காய்கறி சமைக்கும் சரியான முறைகள்

கீரைகள் மற்றும் கிழங்குகள் ஆகியவற்றை சமைக்கும்போது அதை மூடிவைத்து சமைக்கக்கூடாது. கீரைகளை வேகவைக்கும்போது இரண்டு பல் பூண்டும், ஒரு தக்காளியும் சேர்த்து வைப்பது சிறப்பாகும்.
இவ்வாறு செய்தால் கீரையின் இயல்பான நிறமும் சுவையும் காக்கப்படும். பூண்டு மற்றும் தக்காளி சேர்ப்பதால் சத்துக்கள் அதிகரிப்பதுடன், சுவையும் நன்றாக இருக்கும். இது ஆரோக்கியத்துக்கும் பயனுள்ளதாகும்.

பூரி மற்றும் குழம்பு சுவையை உயர்த்தும் டிப்ஸ்

பலருக்கும் பூரி சுடும்போது அது மொறு, மொறுவென்று வரவில்லை என்ற வேதனை இருக்கும். அதற்கு பூரிக்கு மாவு பிசையும்போது அதனுடன் சற்று ரவை சேர்த்து பிசைந்தால் பூரி மொறு, மொறுவென்று வரும்.
மாம்பழக் குழம்பை கெட்டியாக வைப்பது எப்படி? என்று பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். அதற்கு தேங்காய், மிளகு, மஞ்சள், சீரகம் ஆகியவற்றை நாம் அரைக்கும்போது அதனுடன் பச்சரிசியும் சற்று சேர்த்து அரைத்தால் மாம்பழக்குழம்பு கெட்டியாக வரும். இந்த முறைகள் உணவின் தோற்றத்தையும் சுவையையும் மேம்படுத்தும்.

காய்கறி சேமிப்பு மற்றும் ஊறுகாய் ரகசியங்கள்

பொதுவாக காய்கறிகள், பழங்களை வாங்கி வந்தால் அவற்றை காற்றோட்டமாக வைப்பதே சிறந்ததாகவும். வெங்காயம் வாங்கி வந்தவுடன் அவற்றை வெளியில் தரையில் கொட்டி வைப்பது சிறப்பாகும். பிளாஸ்டிக் கவர், ப்ரிட்ஜ் ஆகியவற்றில் வைப்பதை தவிர்ப்பது சிறப்பாகும். மாங்காய் ஊறுகாய் நன்றாக வாசனை வருவதற்கு மாங்காயை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கியதுடன் அதனுடன் உப்பு, மிளகு, பொடி சேர்த்த பிறகு சிறியளவு தேங்காய்ப்பால், நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை உணவின் நீண்டநாள் பயன்பாட்டையும் சுவையையும் உறுதி செய்கின்றன.

தேங்காய் உடைப்பு மற்றும் ரசம் சுவை டிப்ஸ்

சமைப்பதற்காக தேங்காய் பலரும் உடைக்கும்போது இரண்டாக உடையாமல் சிதறலாக உடைவதால் சிரமம் அடைவார்கள். அதற்கு தேங்காயை உடைப்பதற்கு ஒரு 5 நிமிடத்திற்கு முன்பு நன்றாக குளிர்ந்த நீரில் மூழ்க வைக்க வேண்டும். ரசத்தில் பல வகை உண்டு. எந்த வகை ரசமாக இருந்தாலும் அதை ஒரு ஸ்பூன் நெய்யில் தாளித்தால் அதன் சுவை வழக்கத்தை விட மிக அதிகமாக இருக்கும். இந்த சின்ன டிப்ஸ்கள் சமையலை எளிதாக்கும்.

பருப்பு வேகவைக்கும் மற்றும் மீதமுள்ள மாவு பயன்படுத்தும் முறைகள்

பெரும்பாலும் வீடுகள் பருப்பு வேகுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வது பெரும் தலைவலியான ஒன்றாக இருக்கும். அதற்கு துவரம் பருப்பை வேக வைக்கும்போது, அதனுடன் பூண்டையோ அல்லது கடலை எண்ணெய் சிறிய அளவோ சேர்த்தால் மிக சீக்கிரம் வெந்து விடும். இட்லி மாவு புளித்துவிட்டால் என்ன செய்வது? என்ற குழப்பம் சிலருக்கு இருக்கும். அவ்வாறு புளித்துவிட்டால் அதில் கடுகு, உளுந்து, சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய், கடலைப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து தாளித்து குழிப்பணியாரமாக செய்து சாப்பிடலாம். இது உணவு வீணாகாமல் தடுக்கவும் உதவும்.

சமையலை எளிதாக்கும் வழிமுறைகள்

இனி வீட்டில் சமைக்கும்போது இதை அனைவரும் வீடுகளில் பின்பற்றினால் சமையல் எளிதானதாக மாறும்.
இந்த வழிமுறைகள் நேரத்தை சேமிப்பதோடு மட்டுமல்லாமல், உணவின் தரத்தையும் உயர்த்துகின்றன. குடும்பத்தினர் அனைவரும் சுவையாக உணவருந்த உதவும்.

Follow Us