Silambarasan: சிலம்பரசன் என்ற பெயர் STR-னு மாற காரணம் இதுதான்.. கலகலப்பாக பகிர்ந்த சிலம்பரசன்!
STR Name Origin: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திழல்பவர் சிலம்பரசன். இவரின் நடிப்பில் பிரம்மாண்ட படங்கள் உருவாகிவருகிறது. இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய சிலம்பரசன், தனது பெயர் எப்படி STR என மாறியது குறித்து விளக்கமாக பேசியுள்ளார் அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

சிலம்பரசன்
நடிகர் சிலம்பரசன் (Silambarasan) தனது தந்தையான டி. ராஜேந்தரின் (T. Rajendar) இயக்கத்தில் வெளியான படங்களில் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தனது தந்தையின் படங்கள் மூலம் பின் கதாநாயகனாகவும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தார் . அந்த வகையில் இவரின் நடிப்பில் தொடர்ந்து திரைப்படங்கள் உருவாக தொடங்கியிருந்தது. இந்நிலையில் தமிழில் இதுவரை 48 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அதில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் தக் லைஃப் (Thug Life). மணிரத்னம் (Mani Ratnam) இயக்கத்தில் வெளியான இப்படத்தில், நடிகர் கமல்ஹாசனுக்கு (Kamal Haasan) இணையான வேடத்தில் இவரும் நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டு ஜூன் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. ஆனால் இவர்கள் இருவருக்கும் இப்படம் அந்தளவிற்கு வரவேற்பை கொடுக்கவில்லை. 2025ம் ஆண்டி தமிழில் அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகி தோல்வியடைந்த படங்களின் லிஸ்டில் இது முதலில் உள்ளது.
இந்த படத்தை அடுத்ததாக தனது நடிப்பில் கிட்டத்தட்ட 4 படங்களை கைவசம் வைத்துள்ளார் சிலம்பரசன். இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய சிலம்பரசன், தனது பெயர் STR என எப்படி மாறியது என்பது குறித்து மனம் திறந்துள்ளார். அவர் அந்த நேர்காணலில் என்ன கூறியிருந்தார் என்பது குறித்த விவரமாக பார்க்கலாம்.
இதையும் படிங்க: ரஜினியின் 75வது பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாடிய அனிருத்.. வைரலாகும் வீடியோ!
தனது பெயர் STR என மாறியதற்கு காரணம் என்ன என்பது குறித்து சிலம்பரசன் பேச்சு :
அந்த நேர்காணலில் பேசிய நடிகர் சிலம்பரசன், “எனது உண்மையான பெயர் சிலம்பரசன்தான். ஆனால் எனக்கு நிறைய பெயர் இருக்கிறது. நான் என்னை எல்லாரும் சிலம்பரசன் என அழைப்பதைத்தான் விரும்புகிறேன். மேலும் எனது பெயர் STR என எப்படி மாறியது என்ற விஷயம் மிகவும் நகைச்சுவையான ஒன்று. ஒருமுறை நான் வெளிநாட்டு செல்வதற்கு புறப்பட்டிருந்தேன், அந்த பாஸ்போர்ட்டில் எனது முகம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. அந்த பாஸ்போட்டில் எனது பெயர் சிம்பு என போட்டிருந்தாள், அது நான் தான் என அவர்கள் நம்பமாட்டார்கள்.
இதையும் படிங்க: இந்த குழந்தை யாருனு தெரிகிறதா? தமிழில் தளபதி விஜய்யுடன் மட்டும் 2 படத்தில் நடிச்சிருக்காங்க? அட இந்த நடிகைதான்!
அதன் காரணமாக எனது உண்மையான பெயர் சிலம்பரசன் தேசிங்கு ராஜேந்திரன் என்ற பெயர்தான் அதில் இருந்தது. அதிலிருந்துதான் எனது பெயர் STR என அனைவரும் அழைக்க தொடங்கிவிட்டனர். மேலும் இப்படி அழைப்பது மிகவும் எளியதாக இருக்கிறது அல்லவா. மேலும் STR -னு இருக்கிறதை சிலபேரு ST என்றும் என்னை அழைப்பார்கள். சிம்பு மற்றும் சிலம்பு என்றும் என்னை கூப்பிடுவார்கள். மேலும் எனது அப்பா என்னை சிலம்பு என்றுதான் கூப்பிடுவார், எனக்கு நிறைய பெயர்கள் இருக்கிறது” என்று அதில் அவர் வெளிப்படையாக பேசியிருந்தார்.
நடிகர் சிலம்பரசனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் பதிவு :
As per my fans request ❤️ pic.twitter.com/BFLy9bhbTC
— Silambarasan TR (@SilambarasanTR_) November 30, 2025
சிலம்பரசன் தற்போது வெற்றிமாறனின் கூட்டணியில் அரசன் என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது கோவில்பட்டி பகுதிகளில் நடைபெற்றுவருகிறது. மேலும் இப்படம் வரும் 2026ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.