Shruti Haasan : ராஜ்யசபா எம்.பியான கமல்ஹாசன்.. வாழ்த்து தெரிவித்த நடிகை ஸ்ருதி ஹாசன்!
Shruti Haasan Congratulates Kamal Haasan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து நடிகை ஸ்ருதி ஹாசன். தென்னிந்திய மொழி படங்களில் கதாநாயகியாக இவர் நடித்து வருகிறார். இந்நிலையில், இன்று 2025, ஜூலை 25ம் தேதியில் நடிகர் கமல்ஹாசன் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றிருந்தார். இதற்கு வாழ்த்துக் கூறும் விதமாக நடிகை ஸ்ருதி ஹாசன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஸ்ருதிஹாசன் மற்றும் கமல்ஹாசன்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன் (Shruti Haasan). இவர் நடிகர் கமல்ஹாசனின் (Kamal Haasan) மூத்த மகள். இவரின் நடிப்பில் தமிழில் கூலி (Coolie) திரைப்படமானது ரிலீசிற்கு காத்திருக்கிறது. ரஜினிகாந்த் (Rajinikanth) முன்னணி நாயகனாக நடித்திருக்கும், இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (lokesh Kanagaraj) இயக்கியுள்ளார். இப்படத்தின் 3வது பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி, சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில், அதில் நடிகர் ஸ்ருதி ஹாசனும் கலந்துகொண்டார். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், 2025, ஜூலை 25ம் தேதியில் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராக (Rajya Sabha MP) பதவியேற்றுள்ளார். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனுக்கு, பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் சினிமா துறையினர் எனப் பலரும் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கமல்ஹாசனின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதி ஹாசன் வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசனுடனான புகைப்படத்தை பகிர்ந்து, அதில் அவரை பெற்றி எழுதியுள்ளார்.
இதையும் படிங்க : அரங்கம் அதிரட்டுமே.. கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு இதோ!
கமல்ஹாசனை வாழ்த்தி ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு :
அந்த பதிவில் நடிகை ஸ்ருதி ஹாசன், “டியர் அப்பா, இன்று நீங்கள் துணிச்சலான ஒரு புதிய உலகத்தை நோக்கிய பயணத்தைத் தொடங்குகிறீர்கள். உங்கள் கையெழுத்து, குரல் பலத்துடனும் உற்சாகத்துடனும் எதிரொலிக்கும் வகையில், ராஜ்யசபாவில் நீங்கள் பதவியேற்றதைப் பார்த்தது என் மனதில் என்றென்றும் பதிந்த ஒரு தருணம். எப்போதும் போல, நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கவும், நீங்கள் அடைய விரும்பும் அனைத்தையும், அடையவும் நான் விரும்புகிறேன். மேலும் நானும் எப்போதும் உங்கள் மீது அன்பு செலுத்துகிறேன்” என நடிகை ஸ்ருதி ஹாசன் அந்த பதிவில் எழுதியுள்ளார். தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : ராஜ்யசபா எம்.பியான கமல்ஹாசன்.. நாடாளுமன்றத்தில் தமிழில் பதவியேற்பு!
ஸ்ருதி ஹாசனின் கூலி :
நடிகை ஸ்ருதி ஹாசன் நடிப்பில் தமிழில் கூலி மற்றும் ட்ரெயின் போன்ற படங்கள் உருவாகியுள்ளது. இதில் நடிகர் ரஜினிகாந்த்தின் முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் கூலி திரைப்படம், வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன், நடிகர் சத்யராஜின் மகள் வேடத்தில் நடித்துள்ளாராம். இது குறித்து அவரே ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். இந்தப் படத்தில் பான் இந்தியா நடிகர்கள் நடித்திருக்கும் நிலையில், பான் இந்திய மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.