Shriya Saran : அந்த வேடத்தில் நடிப்பதில் எனக்கு தயக்கம் இல்லை – ஸ்ரேயா விளக்கம்

Shriya Saran About Mother Roles In Movie : தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக படங்களில் நடித்து வருபவர் ஸ்ரேயா சரண். இவரின் முன்னணி நடிப்பில் பல படங்ககள் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வகையில் அம்மா வேடத்தில் நடிப்பது குறித்து நடிகை ஸ்ரேயா சரண் ஓபனாக பேசியுள்ளார்.

Shriya Saran : அந்த வேடத்தில் நடிப்பதில் எனக்கு தயக்கம் இல்லை - ஸ்ரேயா விளக்கம்

ஷ்ரியா சரண்

Published: 

30 Aug 2025 18:15 PM

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் வெளியான படங்களில் முன்னணி நடிகையாக நடித்த வந்தவர் ஸ்ரேயா சரண் (Shriya Saran). இவர் தமிழில் ரஜினிகாந்த் (Rajinikanth) முதல் தளபதி விஜய் (Thalapathy Vijay) வரை பல்வேறு பிரபலங்களுடன் இணைந்து ஜோடியாக படங்ககளில் நடித்திருக்கிறார். இவரின் நடிப்பில் தமிழில் குறைவான படங்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த வகையில் திருமணத்திற்கு பிறகு நடிகை ஸ்ரேயா சரண் சினிமாவில் நடிப்பதையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டார். பின் இவர் பல ஆண்டுகளுக்கு பின் கடந்த 2025, மே மாதம் வெளியான ரெட்ரோ (Retro) படத்தில் சிறப்பு பாடல் ஒன்றில் நடனமாடியிருந்தார்.

அதில் “லவ் டீடாக்ஸ்” (Love Detox) என்ற பாடலில் நடிகர் சூர்யாவுடன் (Suriya) இணைந்து நடனமாடியிருந்தார். இந்த பாடல் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது என்றே கூறலாம். இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ஸ்ரேயா சரண், படங்களில் அம்மா வேடங்களில் நடிப்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இவர் பேசிய விஷயம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : ஜன நாயகனில் எனது முதல் காட்சியே விஜய் சாருடன்தான் – மமிதா பைஜூ பேச்சு!

அம்மா வேடத்தில் நடிப்பது குறித்து நடிகை ஸ்ரேயா சரண் பேசிய விஷயம் :

ஸ்ரேயா சரண் பேசுகையில் அவர், “திரைப்படங்களில் கதாபாத்திரம் மிகவும் உறுதியாக இருக்கும்வரை, இளைய ஹீரோக்களுக்கு அம்மாவாக படத்தில் நடிப்பதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை” என மனம் திறந்து பேசியுள்ளார். இவர் பேசிய விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.

ஸ்ரேயா சரணின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட் :

நடிகை ஸ்ரேயா சரண், தெலுங்கு மொழியில் வெளியாகவுள்ள மிராய் என்ற படத்தில் நடிகர் தேஜா சஜ்ஜாவின் அம்மா வேடத்தில் நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2025 செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க : ஆக்ஷன் நாயகியாக அனுஷ்கா.. ‘காதி’ படத்தின் சென்சார் அப்டேட்!

ஆர்.ஆர். ஆர். படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் :

நடிகை ஸ்ரேயா சரண் இந்த மிராய் படத்தில் மட்டுமில்லாமல், கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ஆர்.ஆர்.ஆர். படத்திலும் அம்மா வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அஜய் தேவ்கனின் மனைவியாகவும், நடிகர் ராம் சரணின் அம்மா வேடத்திலும் நடிகை ஸ்ரேயா சரண் நடித்திருந்தார். இவர் இந்த படத்தில் குறைவான நேரமே வந்தாலும், இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும் நடிகை ஸ்ரேயா சரண் தற்போது வரும் படங்களில் கதாபாத்திரம் உறுதியாக இருந்தால் இளம் நடிகர்களுக்கும் அம்மா வேடத்தில் நடிப்பதற்கு தயார் என கூறியுள்ளார்.