உங்களை நினைச்சு ரொம்ப பெருமையா இருக்கு… கணவர் அஜித்திற்கு வாழ்த்து கூறிய ஷாலினி!

Ajith Kumar and Shalini: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்தமான செலிஃபிரிட்டி ஜோடி நடிகர்கள் அஜித் குமார் - ஷாலினி. இந்த ஜோடி ரசிகர்களுக்கு மட்டும் இன்றி பிரபலங்கள் பலருக்கும் எடுத்துக்காட்டக இருக்கிறது இந்த காதல் ஜோடி. இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் சினிமாவில் 33 ஆண்டுகளை கடந்ததை வாழ்த்தி நடிகை ஷாலினி இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உங்களை நினைச்சு ரொம்ப பெருமையா இருக்கு... கணவர் அஜித்திற்கு வாழ்த்து கூறிய ஷாலினி!

அஜித்குமார் மற்றும் ஷாலினி

Published: 

05 Aug 2025 10:45 AM

சினிமாவில் ரீல் காதல் ஜோடிகள் ரியல் ஜோடிகளாக மாறுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அந்த காதல் எவ்வளவு தூரம் பயணிக்கிறது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அப்படி தங்கள் காதலால் அனைவருக்கும் ரோல் மாடலாக இருப்பவர்கள் நடிகர்கள் அஜித் குமார் (Actor Ajith Kumar) மற்றும் ஷாலினி (Actress Shalini). இவர்கள் இருவரும் அமர்களம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீல் ஜோடிகளாக அறிமுகம் ஆனார்கள். அந்தப் படத்தின் போது ஏற்பட்ட காதல் காரணமாக இருவரும் கடந்த 2000-ம் ஆண்டு இரு வீட்டின் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர். 25 வருடங்களாக தங்களது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும் நடிகர்கள் அஜித் குமார் மற்றும் ஷாலினி தம்பதிக்கு அனௌஷ்கா என்ற பெண் குழந்தையும் ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் இருக்கிறார்கள்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து விலகி இருக்கும் நடிகை ஷாலினி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றை ஆரம்பித்தார். இந்தப் பக்கத்தின் மூலமாக தனது ரசிகர்களுடன் இணைப்பில் இருக்கிறார் நடிகை ஷாலினி. அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்கள், கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடையே வைரலாகி வருகிறார்.

அஜித் குமாரை வாழ்த்தி பதிவு வெளியிட்ட ஷாலினி:

இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் சினிமாவில் 33 ஆண்டுகளை கடந்துள்ளார். இதற்கு பிரபலங்களும் ரசிகர்களும் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகை ஷாலினியும் தனது கணவர் அஜித் குமாருக்கு வாழ்த்துப் பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது, நீங்க வெறும் ஒரு தொழிலை மட்டும் உருவாக்கல.. மக்களை சுமந்து, வாழ்க்கையை மாற்றி, எல்லாவற்றையும் அருமையா செய்துட்டீங்க. உங்களை நினைச்சு ரொம்ப பெருமையா இருக்கு, 33 வருடங்களுக்கு வாழ்த்துகள் மற்றும் மகிழ்ச்சி என்று நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

Also Read… பஞ்சதந்திரம் படத்திற்காக ரம்யா கிருஷ்ணன் போட்ட உழைப்பு பார்த்து அசந்துட்டோம் – இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன விசயம்

நடிகை ஷாலினி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு:

Also Read… இன்ஸ்டாவில் 8.5 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் ஃபாலோ செய்யும் ஒரே ஒரு நபர் – யார் தெரியுமா