Sasikumar: எனது படங்கள் எல்லாம் புதுமுக இயக்குநர்களோட.. தோல்வியடைந்த இயக்குநர்களுடன்தான் – சசிகுமார் பேச்சு!

Sasikumars Support For Debut Directors: தமிழில் பிரபல நடிகர்கவும், இயக்குநராகவும் இருப்பவர் சசிகுமார். இவரின் நடிப்பில் மை லார்ட் திரைப்படமானது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் நேர்கணல் ஒன்றில் பேசிய சசிகுமார், புதுமுக இயக்குநர்கள் மற்றும் தோல்வியடைந்த பட இயக்குநர்களுடன் படத்தில் இணைவது ஏன் என்பது குறித்து தெரிவித்துள்ளர்.

Sasikumar: எனது படங்கள் எல்லாம் புதுமுக இயக்குநர்களோட.. தோல்வியடைந்த இயக்குநர்களுடன்தான் - சசிகுமார் பேச்சு!

சசிகுமார்

Updated On: 

06 Feb 2026 12:30 PM

 IST

நடிகர் சசிகுமார் (Sasikumar) தமிழ் சினிமாவில் முதலில் உதவி இயக்குநராக படத்தில் இணைந்தார். பின் சினிமாவில் படங்களை இயக்குவதில் ஆர்வம் கொண்ட இவர், “சுப்ரமணியபுரம்” (Subramaniapuram) என்ற படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்தார். கடந்த 2008ல் வெளியான படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தகத்து. இப்படத்தில் இவரும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்த படத்தை அடுத்ததாக நடிகராகவும் தனது படங்களில் நடிக்க தொடங்கினர். மேலும் இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி (Tourist family). இப்படம் கடந்த 2025ம் ஆண்டு வெளியாகி எதிர்பாராத வரவேற்பைப் பெற்றிருந்தது. அந்த விதத்தில் இப்படத்தை அடுத்ததாக இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள படம்தன் மை லார்ட் (My Lord). இப்படத்தை இயக்குநர் ராஜு முருகன் (Raju Murugan) இயக்கியுள்ளார்.

சசிகுமார் மற்றும் சைத்ரா ஜெ ஆச்சார் நடித்துள்ள இப்படம், வரும் 2026 பிப்ரவரி 13ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புரோமோஷன் தொடர்பாக நேர்காணலில் கலந்துகொண்ட சசிகுமார், தான் எதற்காக அறிமுக இயக்குநர்கள் மற்றும் தோல்வியடைந்த இயக்குநர்களுடன் படம் பண்ணுகிறார் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தனுஷின் ‘டி55’ படத்தின் ஷூட்டிங் பூஜை.. படக்குழு வெளியிட்ட வீடியோ வைரல்!

தோல்வியடைந்த இயக்குநர்களின் படங்களில் இணைவது குறித்து சசிகுமார் சொன்ன விஷயம் :

அண்ட் நேர்காணலில் பேசிய சசிகுமார் “நான் நடித்த படங்கள் எல்லாமே, ஒன்று அறிமுக இயக்குநர்கள் அல்லது தோல்வியடைந்த இயக்குநர்களுடன்தான். நான் வெற்றியடைந்த இயக்குநருடன் பண்ண ஒரே படம் என்றால். நாடோடிகள் படத்திற்கு பின் போராளி என்ற படத்தில் மட்டும்தான். சமுத்திரக்கனியுடன் மட்டுமே நான் 2வது முறை இணைந்து நடித்திருந்தேன். நான் முன்பே ஒரு நிகழ்ச்சியில் ஒரு பத்து புது முக இயக்குநர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என சொல்லியிருந்தேன். மேலும் ஒருமுறை சமுத்திரக்கனி என்னிடம் ஏன் நீங்க தோல்வி இயக்குநர்களிடம் படம் பண்ணுகிறீர்கள்? என கேட்டார். அதற்கு அவரிடம் ” நான் ஒரு டுட்டூரியல் காலேஜ் வைத்திருக்கிறேன், அதனால் அங்கு தோல்வியடைந்த மாணவர்கள்தான் வருவார்கள் என கூறினேன்.

இதையும் படிங்க: கார்த்தியின் ஜப்பான் பட தோல்வி.. அதன் முழு பொறுப்பு நான்தான் – இயக்குநர் ராஜு முருகன்!

அதுதான் என்னையும் இத்தனை வருடமாக கடந்துவர செய்திருக்கிறது. மேலும் நான் தோல்வியடைந்த இயக்குநர்கள், அல்லது புதுமுக இயக்குநர்கள் என பார்ப்பதில்லை. அவர்களின் கதையைத்தான் நான் முக்கியமாக பார்ப்பேன். மேலும் அவர்களை தோல்வியடைந்த இயக்குநர்கள் என சொல்ல முடியாது. அவர் இயக்கிய ஒரு படம்தான் தோல்வியே தவிர, அந்த இயக்குநர் தோல்வியடையவில்லை. நானும் அவர்களின் கதையைத்தான் பார்க்கிறேன், தோல்வியடைந்த படங்களை இல்லை” என அவர் அதில் தெரிவித்திருந்தார்.

அறிமுக மற்றும் தோல்வியடைந்த இயக்குநர்கள் பற்றி சசிகுமார் பேசிய வீடியோ:

தர்பூசணிகள் நிறைந்த லாரியில் வெடிபொருட்கள்! பாலக்காட்டில் நடந்த சம்பவம்
ஆன்லைன் கேமால் பறிபோன 3 சிறுமிகளின் உயிர் - தற்கொலை கடிதத்தால் அதிர்ச்சி
ஸ்ருதி ஹாசனால் தான் எங்கள் மகள் உயிரோடிருக்கிறார்... - சிறுமியின் பெற்றோர் உருக்கம்
அழகான வெற்றிச் சின்னம்... இந்தியா கேட் போட்டோவை பகிர்ந்து டிரம்ப் கருத்து