மகளுக்காக பழி வாங்கும் சரத்குமார்… வைரலாகும் சரத்குமாரின் ஆழி படத்தின் டீசர் 

Aazhi Movie Official Teaser: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சரத்குமார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் அடுத்ததாக நடிகர் சரத்குமார் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஆழி.

மகளுக்காக பழி வாங்கும் சரத்குமார்... வைரலாகும் சரத்குமாரின் ஆழி படத்தின் டீசர் 

ஆழி படத்தின் டீசர் 

Updated On: 

05 Feb 2026 10:16 AM

 IST

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் சரத்குமார் தற்போது அப்பா கதாபபத்திரம் மற்றும் முக்கிய கதாபபத்திரங்களில் மட்டும் இன்றி அவ்வபோது கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தற்போதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி கடந்த 2025-ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் மட்டும் நடிகர் சரத்குமார் நடிப்பில் அடுத்தடுத்து 5 படங்கள் திரையரங்குகளில் வெளியானது. இந்த 5 படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டும் இன்றி நடிகர் சரத்குமாரின் நடிப்பை மக்கள் பாராட்டவும் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் நடிகர் சரத்குமார் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ஆழி. இயக்குநர் மாதவ் ராமதாசன் இந்த ஆழி படத்தை எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் இருந்து முன்னதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படம் வருகின்ற 27-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டீசரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

இணையத்தில் வைரலாகும் ஆழி படத்தின் டீசர்:

இந்தப் படத்தின் டீசரைப் பார்க்கும் போது கடற்கறை பகுதியைச் சேர்ந்த மீனவராக நடிகர் சரத்குமார் நடித்துள்ளது தெரிகிறது. மேலும் இவர் தனது மகளுக்காக பலரை பழிவாங்குவது போல காட்சிகள் தெரிகின்றது. இந்தப் படத்தில் நடிகர் சரத்குமார் உடன் இணைந்து நடிகர்கள் இந்திரஜித் ஜெகஜித், தேவிகா சதீஷ், வையாபுரி, ஸ்ரீஜித் ரேவி, பிர்லா போஸ், தாமரைச்செல்வி, சர்ஜின், மைதிலி சத்யராஜ், பினிஷ் பாபு, பிஜு மவுன்கல் வர்கீஸ், டீனா பாட்டியா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் டீசர் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Also Read… சாம்ராஜியம், சிம்மாசனம் எல்லாம் இருக்கு ஆனா, அந்த க்ரீடாத அணிய தகுதி யாருக்கு இருக்கு? – இணையத்தில் வைரலாகும் லெகசி தொடரின் டீசர்

நடிகர் சரத்குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… போக்கிரி படம் என்னை ஒரு நட்சத்திரமாக மாற்றியது – நடிகர் மகேஷ் பாபு ஓபன் டாக்

உலகின் ஆபத்து நிறைந்த சவாலான விமான நிலையங்கள்
மனப் பயிற்சிகள் பல வழிகளில் நன்மை பயக்கும்.. வியக்கு வைக்கும் ஆய்வுகள்
7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வாயில் கவ்விச்சென்ற புலி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்படும் கேதார்நாத் கோவிலுக்கு செல்லும் பாதை