பராரி பட இயக்குநருடன் புது படத்தில் கைகோர்த்த சந்தானம்.. கதாநாயகி யாருனு தெரியுமா?

Santhanam New Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சந்தானம். இவரின் நடிப்பில் புது படங்கள் தயாராகிவரும் நிலையில், இவர் தற்போது பராரி என்ற படத்தை இயக்கியிருந்த, இயக்குநர் எழில் பெரியவேடே இயக்கத்தில் புது படத்தில் கைகோர்த்துள்ளாராம்.

பராரி பட இயக்குநருடன் புது படத்தில் கைகோர்த்த சந்தானம்.. கதாநாயகி யாருனு தெரியுமா?

சந்தானம் மற்றும் எழில் பெரியவேடே

Updated On: 

03 Mar 2026 15:53 PM

 IST

நடிகர் சந்தானம் (Santhanam) தமிழ் சினிமாவில் ஆரம்பகாலக்கட்ட படங்களில் நகைச்சுவை நாயகனாக நடித்துவந்தார். இவரின் நடிப்பில் தமிழில் இதுவரை பல படங்கள் வெளியாகியிருக்கிறது. சினிமாவிற்கு முன் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சி மற்றும் தொடர்களில் இவர் நடித்துவந்தார். பின் சிலம்பரசனின் (Silambarasan) மன்மதன் (Mammadhan) என்ற படத்தில் மூலமாக சினிமாவில் நுழைந்தார். இப்படத்தில் சிலம்பரசனின் நண்பனாக நடித்திருந்த நிலையில், இவருக்கு பெரும் வரவேற்புகள் கிடைத்திருந்தது. இதையடுத்து தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் கார்த்தி வரை பல்வேறு நடிகர்களின் படங்களிலும் இவர் நடித்துள்ளார். தற்போது இவர் கதாநாயகனாக நடித்துவரும் நிலையில், இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல் (DD Next Level). இப்படம் கடந்த 2025ம் ஆண்டில் வெளியாகியிருந்த நிலையில், எதிர்பாராத வரவேற்பை பெறவில்லை.

இந்த படத்தை நடிகர் ஆர்யா தயாரித்திருந்த நிலையில், தோல்வியில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தை அடுத்ததாக கதாநாயகனாக இவர் புது படத்தில் நடித்துவருகிறாராம். கடந்த 2024ம் ஆண்டில் வெளியான பராரி (Parari) என்ற படத்தை இயக்கியிருந்த இயக்குநர் எழில் பெரியவேடே(Ezhil Periyavede) இப்படத்தை இயக்கிவருவதாக தகவல்கள் வெளியாகியுளளது.

இதையும் படிங்க: தியாகராஜன் குமாரராஜாவைத் தொடர்ந்து மகிழ் திருமேனி உடன் கூட்டணி வைக்கும் விஜய் சேதுபதி – வைரலாகும் தகவல்

சந்தானத்திற்கு ஜோடியாகும் டிராகன் பட நடிகை :

இயக்குநர் எழில் பெரியவேடே இயக்கத்தில் சந்தானம் தற்போது புது படத்தில் இணைந்துள்ளாராம். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது, சென்னை பாலவாக்கம் பகுதிகளில் நடைபெற்றுவருகிறதாம். பராரி படத்தை போலவே இந்த படமும் வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகிவருகிறதாம். இப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக, டிராகன் மற்றும் ஸ்வீட்ஹார்ட் போன்ற படங்களில் நடித்திருந்த, நடிகை கோபிகா ரமேஷ் நடித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சந்தானத்தின் புது படம் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:

நடிகர் சந்தானம் சிலம்பரசனுடன் STR49 என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டிருந்தது. இதை முதலில் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவிருந்த நிலையில், பின் தயாரிப்பு நிறுவனத்தின் பிரச்சனை காரணமாக படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தொடர்ந்து ரஜினிகாந்தின் படங்களுக்கு இசையமைப்பதற்கு என்ன காரணம்? அனிருத் விளக்கம்

இதன் காரணமாக சிலம்பரசன் மற்றும் சந்தானம் கூட்டணி இணையவில்லை என கூறப்பட்டுவந்தது. இந்நிலையில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், சிம்பு நடிக்கும் STR51 படத்தில் இந்த கூட்டணி இணைவதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை.

Follow Us
Related Stories
கே ட்ராமா பிடிக்குமா உங்களுக்கு? தமிழில் காணக் கிடைக்கும் இந்த கேன் திஸ் லவ் பி ட்ரான்ஸ்லேட்டெட்? சீரிசை மிஸ் செய்யாதீர்கள்!
ViRosh: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை.. இன்பதிர்ச்சியை கொடுத்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடி!
சர்வம் மாயா படத்தின் வெற்றி விழாவை கொண்டாடிய படக்குழு… புகைப்படங்களைப் பகிர்ந்த நிவின் பாலி!
அல்லு அர்ஜூன் வீட்டு திருமண விழாவில் பேசில் ஜோசஃப்… அப்போ கூட்டணி கன்ஃபார்மா?
அல்லு அர்ஜுன் – அட்லீயின் AA22 படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது? – ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஹேப்பி நியூஸ்!
இணையத்தில் வைரலாகும் புருஷன் பட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்!
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ