Santhanam : மீண்டும் காமெடியனாக படங்களில் நடிப்பேனா? – நடிகர் சந்தானம்!
Santhanam About Play Comedy Roles : தமிழ் மக்களிடையே சின்னதிரை காமெடி நிகழ்ச்சியின் மூலம் பெரும் புகழ் பெற்றவர் சந்தானம். இவர் தற்போது சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் விரைவில் டிடி நெக்ஸ்ட் லெவல் படமானது ரிலீசாகவுள்ளது. இதைத் தொடர்ந்து ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சந்தானம் மீண்டும் படங்களில் நகைச்சுவை ரோலில் நடிப்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.

கோலிவுட் சினிமாவில் மாறுபட்ட கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடித்து வருபவர் சந்தானம் (Santhanam). சின்னத்திரை நிகழ்ச்சியில் நடித்து பிரபலமான இவர், அதை தொடர்ந்து சினிமாவில் நகைச்சுவை நடிகராக நடித்துப் பிரபலமானார். அதை தொடர்ந்து படங்களில் ஹீரோவாகவும் நடிக்கத் தொடங்கினார். இவரின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம் டிடி நெக்ஸ்ட் லெவல் (DD Next Level). இந்த படத்தை இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் (S. Prem Anand) இயக்கியுள்ளார். இந்த படமானது தில்லுக்கு துட்டு படத்தின் தொகுப்பில் 4வது திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் சந்தானம் ஆக்ஷ்ன் மற்றும் அதிரடி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் இவருடன் பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
சந்தானத்தின் இந்த படத்தினை தி ஷோ பீப்பிள் மற்றும் நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. நடிகர் ஆர்யா இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் வரும் 2025, மே 16ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான ப்ரோமோஷன் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சந்தானம், மீண்டும் படங்களில் காமெடியனாக நடிப்பீர்களா என்ற கேள்விக்குப் பதில் கொடுத்துள்ளார். அதில் அவர் “பழையபடி படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை” என்று தெரிவித்துள்ளார். இதைப் பற்றி விவரமாகப் பார்க்கலாம்.
சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு :
3 Days to go !#DevilsDoubleNextLevel ⚡#DevilsDoubleNextLevelFromMay16@arya_offl @TSPoffl @NiharikaEnt @iampremanand @menongautham @selvaraghavan @geethika0001 @KasthuriShankar @iamyashikaanand #Maran #MottaRajendran @ofrooooo @dopdeepakpadhy @barathvikraman @onlyartmohan… pic.twitter.com/6UdpOwyB38
— Santhanam (@iamsanthanam) May 13, 2025
காமெடியனாக படத்தில் மீண்டும் நடிப்பேனா என்பது குறித்து சந்தானம் பேச்சு :
சமீபத்தில் நடிகர் சந்தானம் கலந்துகொண்ட ப்ரோமோஷன் நிழச்சியில், அவரிடம் படங்களில் மீண்டும் காமெடியனாக நடிப்பீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ளார். அதில் அவர் “படங்களில் நீங்கள் முதலில் காமெடியனாக பார்த்த சந்தானத்தை மீண்டும் பார்க்கமுடியாது, ஏனென்றால் அதைப் பலரும் டிவியில் , யூடியூபில் பல காமெடிகளை பார்த்திருப்பீர்கள். நான் அதைவிட புதியதாக எதாவது ஒன்றில் நடிக்கலாம் என்று சிந்தித்து வருகிறேன். ஒரு துணை கதாபாத்திரமாக எல்லா படங்களிலும் பண்ணுவேனா என்று எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால் நான் ஏற்கனவே 3 & 4 படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தமாகியிருக்கிறேன்.
அந்த படங்களிலும் நான் நடிக்கவேண்டும், மேலும் நான் ஒரு படத்தில் வாங்கிய காசை ரிட்டர்ன் பண்ணிட்டுதான் சிலம்பரசனின் STR 49 படத்திலே நடிக்கவுள்ளேன். அந்த படத்தில் எனது கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என்று நாங்கள் உருவாக்கிக்கொண்டு இருக்கிறோம். மேலும் நானும் ஆர்யாவும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளோம். அந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷ்ன் வேலைகளும் நடந்து வருகிறது. அந்த படத்தின் கதையையும் இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் எழுதியுள்ளார். இது போன்று படங்களில் துணை கதாநாயகனாக நடிப்பேன், ஆனால் பழைய மாதிரி முழுக்க காமெடியனாக நடிப்பதற்குச் சாத்தியமில்லை என்று நடிகர் சந்தானம் கூறியுள்ளார்.