விஜயின் பூவே உனக்காக படத்தில் இரண்டு க்ளைமேக்ஸா? நடிகை சங்கீதா சொன்ன விசயம்!

Poove Unakkaga Movie: நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த பூவே உனக்காக படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை சங்கீத்தா. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் பூவே உனக்காக படம் குறித்து முக்கிய தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

விஜயின் பூவே உனக்காக படத்தில் இரண்டு க்ளைமேக்ஸா? நடிகை சங்கீதா சொன்ன விசயம்!

பூவே உனக்காக

Published: 

01 Sep 2025 21:47 PM

தளபதி விஜய் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி 1996-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் பூவே உனக்காக. ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் விக்ரமன் எழுதி இயக்கி இருந்தார். ரொமாண்டிக் மற்றும் ஃபேமிலி செண்டிமெண்ட் படங்களை இயக்குவததில் பெயர் போன இயக்குநர்களில் ஒருவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் விஜய் நாயகனாக நடித்து இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் சங்கீதா, அஞ்சு அரவிந்த், எம்.என். நம்பியார், நாகேஷ், ஜெய் கணேஷ், மலேசியா வாசுதேவன், சார்லி, விஜயகுமாரி, சுகுமாரி, விஜயசந்திரிகா, பி.ஆர்.வரலட்சுமி, மீசை முருகேசன்,
ஆர்.எஸ். சிவாஜி, சக்தி குமார், மதன் பாப், சிவா, தாரிணி, ஷீலா, தினேஷ், முரளி, சிங்கமுத்து, விஜி, கே. சிவசங்கர், ராஜகுமாரன், ஹேமலதா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி தயாரித்து இருந்தார். தனது காதலியின் காதல் வாழ்க்கை வெற்றிப்பெற வேண்டும் என்பதற்காக பொய்யான ஒரு அடையாளத்துடன் சென்று பிரிந்து வாழ்ந்த இரண்டு குடும்பங்களை சேர்த்து வைக்கும் கதாப்பாத்திரத்தில் நடிகர் விஜய் நடித்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பூவே உனக்காக படம் குறித்து நடிகை சங்கீதா சொன்ன சுவாரஸ்ய சம்பவம்:

விஜயின் காதலியின் அத்தையும் அவரது காதலனின் சித்தப்பாவுக் காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்துகொள்வார்கள். இதனால் இவர்களின் குடும்பத்தினர் பிரிந்து இருப்பார்கள். இந்த நிலையில் தனது காதல் தான் வெற்றியடையவில்லை தனது காதலியின் காதலாவது வெற்றியடைய வேண்டும் என்பதற்காக காதலியின் ஊருக்கே வந்து ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டவர்களின் மகன் எனக்கூறி அவர்களை சேர்த்து வைப்பார்.

இதற்கு இடையில் விஜயின் மனைவி என்று நடிகை சங்கீதா வந்து கூறுவது குழைப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் க்ளைமேக்ஸில் விஜய் ஓடிப்போய் திருமணம் செய்தவர்களின் மகன் அல்ல சங்கீதா தான் அவர்களின் மகள் என்பது தெரிகிறது. ஆனால் இரண்டு குடும்பத்திற்கும் விஜயை பிடித்துப்போக சங்கீதாவை திருமணம் செய்துகொள்ள கேட்பார்கள். படத்தில் அவர் முடியாது என்று சென்றுவிடுவார்.

Also Read… நடிகர் சூர்யாவிற்கு நாயகியாகும் பிரபல மலையாள நடிகை?

ஆனால் அவர்கள் இருவரும் சேர்வது போலவும் ஒரு க்ளைமேக்ஸ் எடுக்கப்பட்டதாகவும் இறுதியில் இரண்டில் பிரிவது தான் சரி என்று படக்குழு முடிவு செய்து படத்தை ரிலீஸ் செய்தனர் என்று தெரிவித்தார் சங்கீதா. இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

நடிகர் விஜயின் சமீபத்திய எக்ஸ் தள பதிவு:

Also Read… டிசம்பரில் வெளியாகிறது கார்த்தியின் வா வாத்தியார்… படக்குழு கொடுத்த அப்டேட்