Sai Pallavi: தீபிகா படுகோனின் இடத்தை நிரப்பும் சாய் பல்லவி.. எந்த படத்தில் தெரியுமா?
Deepika Padukone Replacement : தென்னிந்திய சினிமாவையும் கடந்து பான் இந்திய நடிகையாக முன்னேறிவருபவர் சாய் பல்லவி. இவர் தற்போது பாலிவுட் சினிமாவிலும் கதாநாயகியாக நடித்துவரும் நிலையில், பிரபல படம் ஒன்றில் நடிகை தீபிகா படுகோன் நடித்த ரோலில் இவர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தீபிகா படுகோன் மற்றும் சாய் பல்லவி
நடிகை சாய் பல்லவி (Sai Pallavi) தென்னிந்திய மொழி படங்களான தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்களில் கதாநாயகியாக நடித்துவருகிறார். மலையாள சினிமாவின் மூலமாகவே கதாநாயகியாக அறிமுகமான நிலையில், தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நாயகியாக வலம்வருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக அமரன் (Amaran) என்ற படமானது வெளியாகியிருந்தது. உண்மை கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு (Sivakarthikeyan) ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார். சிவகார்த்திகேயனை விடமும் இப்படத்தில் இவரின் நடிப்பு போற்றப்பட்டது. மேலும் இவரின் நடிப்பில் தற்போது பாலிவுட் சினிமாவிலும் படங்கள் தயாராகிவருகிறது. ஆமிர்கானின் (Aamir Khan) மகன் ஜுனைத் கானுடன் “ஏக் தின்” (EK Din) என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 2026 மே மாதத்தில் வெளியாகிறது.
மேலும் பான் இந்திய படமான ராமாயணம் (Ramayana) படத்திலும் சீதையாக நடித்துள்ளார். இப்படம் 2026 தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. இந்நிலையில் தெலுங்கில் தீபிகா படுகோன் (Deepika Padukone) நடித்த கல்கி 2898ஏடி படத்தின் பார்ட் 2வில் (Kalki 2898AD Part 2) அவரின் வேடத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எனது வாழ்க்கையிலே ஒரே நாளில் ஓகே சொன்ன படம் இதுதான்- அனஸ்வரா ராஜன் பேச்சு!
நடிகை சாய் பல்லவியின் இன்ஸ்டாகிராம் பதிவு :
கல்கி 2898ஏடி படத்தில் நடிகர் பிரபாஸ் முன்னணி நாயகனாக நடிக்க, அவருடன் நடிகர்கள் திஷா பதானி, தீபிகா படுகோன், சோபனா, கமல்ஹாசன் உள்ளிட்ட பான் இந்திய பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த படமானது தீபிகா படுகோன் மற்றும் பிரபாஸின் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. அறிவியல் மற்றும் இந்து மதம் சார்ந்த கதைக்களத்தில் இப்படம் கடந்த 2024ம் ஆண்டில் வெளியாகியிருந்த நிலையில், சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. இந்த படத்தை இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கியிருந்தார். இவர்தான் மகாநதி படத்தையும் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விஜய் சேதுபதி – அரவிந்த் சுவாமியின் ‘காந்தி டால்க்ஸ்’ சைலன்ட் படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!
வேலை நேரம் பிரச்சனையின் காரணமாக இப்படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியதாக கடந்த 2025ம் ஆண்டில் படக்குழு அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து இப்படத்தில் நடிகை ஆலியா பட் நடிப்பதாக கூறப்பட்டுவந்த நிலையில், தற்போது தீபிகா படுகோன் நடித்த சுமதி வேடத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்கவுள்ளாராம். இந்நிலையில் கல்கி 2898ஏடி பார்ட் 2வில் சாய் பல்லவி நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இது குறித்து படக்குழு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.