எனக்கு ரொம்ப பிடிச்சது கமல் சாரின் அந்தப் படம் தான்… மனம் திறந்து பேசிய சாய் அபயங்கர்

Sai Abhyankar Talks About Kamal Haasans Mahanadhi Movie: தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் இளம் இசையமைப்பாளராக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் சாய் அபயங்கர். இவர் பேட்டி ஒன்றில் கமல் ஹாசனின் நடிப்பு காரணமாக மகாநதி படம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்து உள்ளார்.

எனக்கு ரொம்ப பிடிச்சது கமல் சாரின் அந்தப் படம் தான்... மனம் திறந்து பேசிய சாய் அபயங்கர்

சாய் அபயங்கர்

Published: 

02 Apr 2026 18:48 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் பிரபல பாடகர்களாக வலம் வந்தவர்கள் தான் திப்பு மற்றும் ஹரிணி தம்பதி. இவர்களின் ஒரே மகன் தான் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். ஆல்பம் பாடல்களை தயாரித்து வெளியிடுவதன் மூலமாக ரசிகர்களிடையே பிரபலமான இவர் தொடர்ந்து சினிமாவில் இசையமைக்கும் வாய்ப்புகளைக் பெற்றார். திரையுலகில் ஒரு படம் வெளியாவதற்கு முன்னதாகவே அடுத்தடுத்தப்  படங்கள் இசையமைக்கும் வாய்ப்பை வரிசையாக பெற்று வருகிறார். தமிழில் இவரது இசையில் டியூட் படம் வெளியானது. இதுதான் தமிழ் சினிமாவில் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்ததாக நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள கருப்பு படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் இருந்து இதுவரை இரண்டு சிங்கிள் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து தமிழ் மட்டும் இன்றி மலையாளம் மற்றும் தெலுங்கு என தொடர்ந்து அடுத்தடுத்த மொழிகளில் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். பான் இந்திய சினிமாவில் இளம் இசையமைப்பாளராக வலம் வரும் சாய் அயபங்கர் தொடர்ந்து படங்களுக்கு இசையமைப்பது மட்டும் இன்றி ஆல்பம் பாடல்களையும் உருவாக்கி வருகிறார். அதன்படி அவர் இறுதியாக உருவாக்கிய பவழமல்லி பாடல் மக்களிடையே தற்போது மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

கமல் சாரின் நடிப்பிற்காகவே எனக்கு மகாநதி படம் மிகவும் பிடிக்கும்:

இந்த நிலையில் சமீபத்தில் சாய் அபயங்கர் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி அந்தப் பேட்டியில் தனக்கு கமலின் நடிபில் வெளியான மகாநதி படம் மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்து இருந்தார். மேலும் கமல் ஹாசனின் நடிப்பிற்காகவே அந்தப் படம் தனக்கு மிகவும் பிடித்த படமாக உள்ளது என்றும் சாய் அபயங்கர் தெரிவித்து இருந்தார். அந்தப் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… காக்கி சட்டை – கொடி படங்களில் அப்படி நான் செய்தது தவறு… இயக்குநர் துரை செந்தில் குமார் ஓபன் டாக்

இணையத்தில் வைரலாகும் சாய் அபயங்கரின் பேச்சு:

Also Read… மிகவும் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி உள்ளது ராமாயணா – வைரலாகும் டீசர்

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..