Karuppu: சரவெடி ஆயிரம் பத்தனுமா.. சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் முதல் பாடல் அப்டேட் கொடுத்த சாய் அபயங்கர்!
Karuppu Movie: சூர்யாவின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் திரைப்படம்தான் கருப்பு. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இப்படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேட்ட நிலையில், தீபாவளிக்கு வெளியாவதை அப்படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் உறுதி செய்துள்ளார்.

சூர்யாவின் கருப்பு மூவி
தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகி வெற்றிபெற்ற படம் ரெட்ரோ (retro). இந்த படத்தில் சூர்யா ஆக்ஷன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் நடித்துவந்த 45வது படம்தான் கருப்பு (karuppu). இந்த படமானது ஆரம்பத்தில் சூர்யா45 என அறிவிக்கப்பட்டு, கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் முதல் ஷூட்டிங் தொடங்கியிருந்தது. இந்த படத்தைப் பிரபல நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி (RJ. Balaji) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் பிரம்மாண்ட உருவாகும் படம் இந்த கருப்பு. இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்திருக்கிறார்.
இந்த படமானது முற்றிலும் ஆக்ஷ்ன் நிறைந்த கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இந்த படமானது 2025 ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், முதல் பாடல் மட்டும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பாடல் பற்றி ரசிகர்கள் அப்டேட் கேட்டுவந்த நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) சிறப்பான அப்டேட்டை கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ஆக்ஷன் ஹீரோவாக தனுஷ்… ‘தேரே இஷ்க் மெய்ன்’ பட முதல் பாடல் ரிலீஸ்!
சூர்யாவின் கருப்பு படத்தின் முதல் சிங்கிள் குறித்து சாய் அபயங்கர் கொடுத்த அப்டேட் பதிவு :
சரவெடி ஆயிரம் பத்தனுமா 💥 #Karuppu
— abhyankkar (@SaiAbhyankkar) October 18, 2025
இந்த பதிவில் அவர், கருப்பு திரைப்படத்தின் பாடல்களின் வரியை குறிப்பிட்டு, இன்று அல்லது நாளைக்குள் கருப்பு படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி வெளியாகும் என அப்டேட்டை கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்த தகவலானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
கருப்பு திரைப்படத்தின் 2025 தீபாவளி ரிலீஸ் தள்ளிப்போக காரணம் :
இந்த கருப்பு திரைப்படத்தின் ஷூட்டிங் 90 சதவீதம் நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படமானது இந்த் 2025ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிட முயற்சிப்பதாக இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்திருந்தார். இந்தப் படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கில்லர் படம் இப்படித்தான் இருக்கும்.. எஸ்.ஜே.சூர்யா அப்டேட்!
மேலும் இந்த கருப்பு திரைப்படமானது வரும் 2026ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுவருவதாக கூறப்படுகிறது. இந்த 2025 தீபாவளி அன்று கருப்பு படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.