கதை சொல்வதற்கு மொழித்தடை இல்லை – வாரணாசி படம் குறித்து எஸ்.எஸ்.ராஜமௌலி பேச்சு!
Director SS Rajamouli: ஒட்டுமொத்த இந்தியாவும் காத்திருக்கும் பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படம்தான் வாரணாசி. இதில் மகேஷ் பாபு மற்றும் எஸ்.எஸ்.ராஜமௌலி கூட்டணி இணைந்துள்ள நிலையில், ஒரு பான் இந்திய படமாக தயாராகிவருகிறது. அந்த வகையில் இப்படம் குறித்து ராஜமௌலி சிறப்பான அப்டேட் ஒன்றை தெரிவித்துள்ளர்.

எஸ்.எஸ்.ராஜமௌலி
தெலுங்கு சினிமாவில் உச்ச இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் எஸ்.எஸ்.ராஜமௌலி (SS Rajamouli). இவரின் இயக்கத்தில் பாகுபலி (Baahubali), நான் ஈ, மாவீரன் என பல்வேறு படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. இவரின் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும். அந்த வகையில் இவரின் இயக்கத்தில் புதிதாக தயாராகிவரும் திரைப்படம்தான் வாரணாசி (Varanasi). இப்படத்தில் நடிகர் மகேஷ் பாபு (Mahesh Babu) நாயகனாக நடிக்க, நடிகை பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra) முன்னணி நாயகியாக நடித்துவருகிறார். மேலும் மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் இப்படத்தின் முக்கிய வில்லனாக நடித்துள்ளார்.
இந்த படமானது கிட்டத்தட்ட ரூ 4000ம் கோடி பட்ஜெட்டில் தயாராகிவருவதாக கூறப்படும் நிலையில், ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது. இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ஷூட்டிங் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த எஸ்.எஸ்.ராஜமௌலி, வாரணாசி படம் குறித்து அப்டேட் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மே மாத ரிலீஸை குறிவைக்கும் நடிகர் விக்ரமின் துருவ நட்சத்திரம் படம்
வாரணாசி திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி:
அதில் ராஜமௌலி பேசுகையில், “கதை சொல்வதற்கு மொழித்தடை இல்லை. உணர்ச்சியும் மனித அனுபவமும் மட்டுமே முக்கியம். அவையே எனது அடுத்த படத்தின் அடித்தளம், இது எனது மிகவும் லட்சியமான திட்டம் என தெரிவித்துள்ளார். தற்போது இதுகுறித்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: முதல் பாகத்தை விட ஜெயிலர் 2 படம் மாபெரும் வெற்றியைப் பெறும் – நடிகர் யோகி பாபு
வாரணாசி திரைப்படம் குறித்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி வெளியிட்ட எக்ஸ் பதிவு:
THANK YOU EVERYONE for all the love, accolades and applause for the #Varanasi Announcement Video. Our whole @VaranasiMovie team is grateful to all of you. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/IkjWle0gm5
— rajamouli ss (@ssrajamouli) November 16, 2025
வாரணாசி படத்தின் ரிலீஸ் எப்போது:
இந்த வாரணாசி படத்தில் பல்வேறு பான் இந்திய நடிகர்கள் நடித்துவருகிறார்கள். அதிலும் குறிப்பாக பல தெலுங்கு நடிகர்கள் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் தீவிரமாக இருந்துவரும் நிலையில், படமானது கிட்டத்தட்ட 2ஆண்டுகளாக தயாராகிவருகிறது. அந்த வகையில் இன்னும் சில மாதங்களில் இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துவிடும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இப்படத்தை வரும் 2027ம் ஆண்டு மார்ச் 27ம் தேதியில் வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. அந்த வகையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துவருகிறது.