ஜாலியான ரொமாண்டிக் காமெடி படத்தை பார்க்கனுமா? அப்போ ஓடிடியில் இந்த ஃபிதா படத்தை மிஸ் செய்யாதீர்கள்
Fidaa Movie OTT Update: தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சேகர் கம்முலா. இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற ரொமாண்டிக் காமெடி படம் ஃபிதா. இந்தப் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

ஃபிதா
தமிழ் சினிமா ரசிகர்களிடையே மற்ற மொழிப் படங்கள் அதிக அளவில் வரவேற்பைப் பெறும் என்றால் அது அண்டை மாநில மொழிகளான தென்னிந்திய மொழிகளின் படங்கள் என்பதே ஆகும். அதன்படி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிப் படங்கள் பார்ப்பதற்கு இலகுவாக இருக்கும். இதன் காரணமாகவே இந்த மொழிகளில் வெளியாகும் படங்களும் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அது மட்டும் இன்றி தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் மற்ற தென்னிந்திய மொழி சினிமா ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் முன்னதாக தெலுங்கு சினிமாவில் ரொமாண்டிக் காமெடி பாணியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற ஃபிதா படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
அதன்படி இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியன படம் ஃபிதா. இந்தப் படத்தில் நடிகர் வருண் தேஜ் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை சாய் பல்லவி நாயகியாக நடித்து இருந்தார். இதுதான் இவர் தெலுங்கு சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆன முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ராஜா செம்பொலு, சரண்யா பிரதீப், சாய் சந்த், தாஷ்யம் கீதா பாஸ்கர், சத்யம் ராஜேஷ், ஆர்யன் தல்லா, காயத்ரி குப்தா, மனிஷா ஈரபத்தினி, கத்தரினா ரிக்டர், ஹர்ஷ்வர்தன் ரானே, ஸ்ரீ கௌரி பிரியா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
ரொமாண்டிக் காமெடியில் வெளியான ஃபிதா படம் எப்படி இருக்கும்?
அம்மா இல்லாத சாய் பல்லவி தனது அக்கா உடன் தந்தையின் பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார். அப்பா மட்டும் என்பதால் அவர் மீது அதிக பாசம் உடைய பெண்களாக இருவரும் வளர்கிறார்கள். இப்படி இருக்கும் சூழலில் அக்காவிற்கு அமெரிக்காவில் இருந்து வரன் வருகிறது. தாய் தந்தை இல்லாத மூன்று அண்ணன் தம்பிகளில் முதலாவது அண்ணனுக்கும் சாய் பல்லவியின் அக்காவிற்கும் திருமணம் நடைபெறுகிறது.
Also Read… நடிகை அசினின் 10-வது திருமண நாள்… கணவர் பகிர்ந்த எக்ஸ்குளூசிவ் திருமணப் புகைப்படம்
தனது அக்காவை திருமணம் செய்துகொள்ளும் நபரின் தம்பிதான் நாயகன் வருண் தேஜ். திருமணம் நடைபெறுவதற்கு முன்னதாகவே சாய் பல்லவிக்கும் வருண் தேஜ் இருவருக்கும் இடையே காதல் ஏற்படுகின்றது. அவர்களின் காதல் எப்படி சேர்ந்தது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜியோசினிமா/ஹாட்ஸ்டார், ஆஹா மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே என அனைத்திலும் காணக் கிடைக்கின்றது.
Also Read… இரண்டாவது குழந்தைக்கு வெய்டிங்… மீண்டும் கர்ப்பமாக இருக்கும் அட்லீ – ப்ரியா தம்பதி!