நடிப்பிற்கு ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை ரோஜா… வாழ்த்தும் பிரபலங்கள்

Actress Roja Selvamani: தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக இருந்து தற்போது அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார் ரோஜா செல்வமணி. இவர் நடிப்பிற்கு பல ஆண்டுகளாக இடைவெளி விட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் நடிப்பிற்கு ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். அதனை பிரபலங்கள் கொண்டாடி வருகின்றனர்.

நடிப்பிற்கு ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை ரோஜா... வாழ்த்தும் பிரபலங்கள்

நடிகை ரோஜா

Published: 

05 Nov 2025 18:51 PM

 IST

தெலுங்கு சினிமாவில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான பிரேமா தபஸ்ஸு என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை ரோஜா. அதனைத் தொடர்ந்து 1992-ம் ஆண்டு வெளியான எம்பருத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை ரோஜா. இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கி இருந்தார். தன்னை தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் செய்த இயக்குநரையே பின் நாளில் திருமணம் செய்துக்கொண்டார் நடிகை ரோஜா. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல முன்னணி நாயகன்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார். அதன்படி இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகன்களான சரத்குமார், ரஜினிகாந்த், பிரபுதேவா, சத்யராஜ், கார்த்திக், முரளி மற்றும் பிரபு என பலருடன் இணைந்து நடித்துள்ளார்.

தொடர்ந்து தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் பலப் படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் தொடர்ந்து அரசியலில் களமிறங்கினார். அமைச்சராக இருந்து மக்களுக்கு பணியாற்றிய இவர் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிப்பில் களம் இறங்கியுள்ளார்.

நடிப்பிற்கு ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை ரோஜா:

இந்த நிலையில் இயக்குநர் டி.டி. பாலச்சந்திரன் எழுதி இயக்க உள்ள படம் லெனின் பாண்டியன். இந்தப் படத்தின் மூலம் கங்கை அமரன் முன்னணி நடிகராக அறிமுகம் ஆகியுள்ளார். மேலும், இவருடன் இணைந்து சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகை ரோஜா இந்தப் படத்தில் நடிக்க உள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இவர் படத்தில் நடிக்க உள்ளதால் இவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Also Read… நவம்பர் மாதம் இத்தனை படங்கள் ரீ ரிலீஸ் ஆகிறதா? லிஸ்ட் இதோ

லெனின் பாண்டியன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… க்ரைம் த்ரில்லர் பிடிக்கும்னா அஞ்சாம் பாத்திரா படத்தை மிஸ் செய்யாதீர்கள்