RJ Balaji : ஆர்.ஜே.பாலாஜியின் பர்த்டே.. சூர்யாவின் ‘கருப்பு’ படத்தில் இருந்து வெளியான புகைப்படம்!
RJ Balaji Birthday : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஆர்.ஜே. பாலாஜி. இவர் திரைப்படங்களில் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் பணியாற்றிவருகிறார். இவரின் இயக்கத்தில் சூர்யாவின் 45வது படமான கருப்பு உருவாகிவரும் நிலையில், அப்படத்தின் ஷூட்டிங் தளத்திலிருந்து வெளியான புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஆர்.ஜே. பாலாஜி மற்றும் கருப்பு படக்குழு
நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் ரிலீசிற்கு தயாராகிவரும் திரைப்படம் சூர்யா45, அதாவது கருப்பு (Karuppu). இந்தப் படத்தின் முதல் அறிவிப்பு கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியானது. அதைத் தொடர்ந்து படத்தின் ஷூட்டிங்கும் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், மேலும் படமானது இறுதிக்கட்ட வேலைகளிலிருந்து வருகிறது. இந்தப் படத்தை நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி (RJ Balaji) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் மூன்றாவதாக உருவாகியிருக்கும் படமாக இந்த கருப்பு திரைப்படம் உருவாகிவருகிறது . இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததாக கூறப்படும் நிலையில், இதைப் பற்றிப் படக்குழு எந்த அறிவிப்புகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு முன் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி சொர்க்கவாசல் (Sorgavaasal) என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். கடந்த 2024ம் ஆண்டு வெளியான இப்படத்தை இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியிருந்தார்.
இந்தப் படமானது கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இந்த படத்தத் தொடர்ந்து சூர்யாவுடன் கருப்பு படத்தில் இணைந்தார். இந்த நிலையில் 2025, ஜூன் 20ம் தேதி அன்று ஆர்.ஜே. பாலாஜியின் 40வது பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியிருந்தது. அதை தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் தளத்தில் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் கருப்பு படக்குழுவினர் இருக்கும் வைகையில் உள்ள புகைப்படமும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இணையத்தில் வைரலாகும் ஆர்.ஜே. பாலாஜியின் புகைப்படம் :
RJBalaji & his crew from the sets of #Karuppu 📸✨ pic.twitter.com/xBLAisLFFV
— AmuthaBharathi (@CinemaWithAB) June 20, 2025
ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் ஹிட்டான படங்கள் :
சினிமாவில் ஆரம்பத்தில் துணை நடிகராக நுழைந்தவர் ஆர்.ஜே. பாலாஜி. சினிமாவில் திரைப்படங்களில் துணை கதாபாத்திரம் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இவர் முதலில் இயக்குநராக அறிமுகமான படம் மூக்குத்தி அம்மன் கடந்த 2020ம் ஆண்டு வெளியான இப்படத்தில் நடிகை நயன்தாரா முன்னணி ரோலில் நடித்திருந்தார்.
சமூக கருத்துக்கள் கொண்ட திரைப்படமாக இந்தப் படம் வெளியாகியிருந்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வீட்டுல விசேஷம் என்ற படத்தையும் இயக்கியிருந்தார். இந்த படமானது இந்தியில் வெளியான “பதாய் ஹோ” என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமாகும். இவரின் இயக்கத்தில் வெளியான இரு படங்களும் சூப்பர் ஹிட்டானது. அதைத் தொடர்ந்துதான் சூர்யாவுடன் கருப்பு திரைப்படத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் கருப்பு படம் :
நடிகர் சூர்யாவின் இந்த கருப்பு படமானது ஆரம்பத்தில் சூர்யா45 என்றுதான் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் இணைந்து நடித்துள்ளார். இவரின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டு வெளியாகப்போகும் 5வது திரைப்படமாக இந்த கருப்பு உருவாகியிருக்கிறது.
இந்த படத்தை ட்ரீம்ஸ் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்து வருகிறது. மேலும் அதைத் தொடர்ந்து இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். இவரின் இசையமைப்பில் உருவாகும் 2வது தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.