கருப்பு படம் தாமதமாக வெளியாக இதுதான் காரணம் – இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி ஓபன் டாக்

RJ Balaji Talks About Karuppu Movie Delayed : தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் இயக்குநராக உள்ளவர் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி. இவரது இயக்கத்தில் உருவான கருப்பு படம் தாமதமாக வெளியாக என்ன காரணம் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

கருப்பு படம் தாமதமாக வெளியாக இதுதான் காரணம் - இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி ஓபன் டாக்

கருப்பு

Published: 

07 May 2026 10:51 AM

 IST

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகம் ஆகி தற்போது மக்களுக்கு பிடித்த இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி. இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் என்றாலே அதற்கு ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தற்போது எழுதி இயக்கி உள்ள படம் கருப்பு. நடிகர் சூர்யா நாயகனாக நடித்து உள்ள இந்தப் படம் கடந்த 2024-ம் ஆண்டே படப்பிடிப்பை தொடங்கிய நிலையில் கடந்த 2025-ம் ஆண்டே திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் குறிப்பிட்ட நேரத்தில் வெளியாகாமல் தொடர்ந்து பல காரணனங்களால் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு தற்போது படம் திரையரங்குகளில் மிகவும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்து உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் வருகின்ற 14-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படம் தொடர்பான பல தகவல்களை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பேசி வருகிறார். அது தற்போது வைரலாகி வருகின்றது.

கருப்பு படம் தாமதமாக வெளியாக இதுதான் காரணம்:

இந்தப் படத்தை உருவாக்கும் பணியில் சில தாமதங்கள் ஏற்பட்டன. சில நாட்களில் படப்பிடிப்பு நடைபெறவில்லை. சில மாதங்களில் படப்பிடிப்பே இல்லாமல் இருந்தது. அந்த நேரத்தை நாங்கள் எங்கள் தவறுகளைத் திருத்திக்கொள்ளப் பயன்படுத்திக்கொண்டோம்; எதிர்பாராத விதமாக, சில நல்ல விஷயங்களும் நிகழ்ந்தன. இப்போது, ​​இப்படம் மிகச் சிறப்பாக உருவாகி வந்துள்ளது. இப்படம் நிச்சயம் ஒரு பெரும் வெற்றியைப் பெறும். இதில் ஏதேனும் நேர்ந்தால், அதற்கான முழுப் பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்வேன் என்றும் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… தனுஷின் வாத்தி படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் இவரா? இவர் நடித்திருந்தால் மெகா ஹிட்டாகிறுக்குமே!

இணையத்தில் வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு:

Also Read… சேயோன் பட நாயகியை உறுதி செய்த படக்குழு – வைரலாகும் எக்ஸ் தள பதிவு

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..