Karuppu: சூர்யாவின் ‘கருப்பு’ படம்… ரிலீஸ் பற்றி அப்டேட் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி!

RJ Balaji Karuppu Movie Release Update : நடிகர் சூர்யாவின் 45வது திரைப்படமாக உருவாகியிருப்பது கருப்பு. இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் இப்படமானது தயாராகிவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி கருப்பு படத்தின் ரிலீஸ் மற்றும் இசையமைப்பு பற்றிப் பேசியுள்ளார். அது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

Karuppu:  சூர்யாவின் கருப்பு படம்... ரிலீஸ் பற்றி அப்டேட் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி!

கருப்பு திரைப்படம்

Published: 

25 Jul 2025 14:04 PM

இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியின் (BJ Balaji) இயக்கத்தில் தமிழில் 4வது திரைப்படமாக உருவாகிவருவது கருப்பு (Karuppu). நடிகர் சூர்யாவின் (Suriya) முன்னணி நடிப்பில் இந்த படமானது உருவாகி வருகிறது. இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்தின் இறுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்துள்ளார். சூர்யாவின் 45வது திரைப்படமாக உருவாகிவரும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் (Dream Warrior Pictures) நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் முதல் டீசர் கடந்த 2025, ஜூலை 23ம் தேதியில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியிருந்தது.

இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது எனக் கூறலாம்.இப்படத்தின் டீசருக்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் (Sai abhyankkar) இசையமைப்பும் மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய ஆர்..ஜே. பாலாஜி கருப்பு படத்தை பற்றிப் பேசியுள்ளார். அதில் அவர், “கருப்பு படத்தை சுடச் சுட தீபாவளிக்குக் கொடுக்க ட்ரை பண்ணுறோம்” எனக் கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி வருகிறது . மேலும் அவர் பேசியது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

இதையும் படிங்க : ‘LCU’ உருவான விதம்.. லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்!

இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி கருப்பு படம் பற்றி பேசியது :

நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, ” சூர்யாவின் கருப்பு படத்தைச் சுடச் சுட 2025 தீபாவளிக்குக் கொடுக்க ட்ரை பண்ணுறோம், கடந்த ஒரு வருடமாக இந்த படத்திற்கு நாங்கள் எங்களின் முயற்சிகளையும் போட்டிருக்கிறோம். கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை உறுதியளித்திருந்தேன். அந்த வாக்குறுதி நிச்சயமாக நிறைவேற்றப்படும். மேலும் இப்படத்தின் ஆரம்பத்தில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பயந்தார். ஆனால் இப்போது மக்கள் டீசருக்கு கொடுத்த வரவேற்பில் அவர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்” என இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி அதில் பேசியுள்ளார். இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : 10 வருடங்களுக்குப் பின் சினிமாவில் களமிறங்கும் நடிகர் அப்பாஸ்!

சூர்யாவின் கருப்பு படத்தின் டீசர் பதிவு :

நடிகர் சூர்யாவின் இந்த கருப்பு படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த இறுதிக்கட்ட வேலைப்பாடுகளிலிருந்து வருகிறது. இந்த படத்தில் திரிஷா கிருஷ்ணன் முன்னணி நாயகியாக நடிக்க, அவருடன் பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர், யோகி பாபு , ஷிவதா, இந்திரன்ஸ், அனகா மாயா ரவி, நட்டி நடராஜன் மற்றும் ஆ.ஜே. பாலாஜியும் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் சூர்யா “சரவணன் என்ற கருப்பு” என்ற பெயரில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.