உணவு என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது – பொய்யான செய்திக்கு விளக்கம் அளித்த ரிஷப் ஷெட்டி

Rishabh Shetty: கன்னட சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் காந்தாரா. இந்தப் படத்தின் முதல் பாகம் தற்போது வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் படக்குழுவினர் தெரிவித்ததாக வெளியான வதந்திக்கு ரிஷப் ஷெட்டி விளக்கம் அளித்தது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

உணவு என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது - பொய்யான செய்திக்கு விளக்கம் அளித்த ரிஷப் ஷெட்டி

ரிஷப் ஷெட்டி

Updated On: 

23 Sep 2025 13:25 PM

 IST

கன்னட சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ரிஷப் ஷெட்டி. 2012-ம் ஆண்டு முதல் கன்னட சினிமாவில் நடிகராக இருக்கும் இவர் தற்போது படங்களையும் இயக்கி வருகிறார். அதன்படி கடந்த 2016-ம் ஆண்டு கன்னட சினிமாவில் வெளியான ரிக்கி என்ற படத்தின் மூலம் இவர் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி நாயகனாக நடித்து இருந்தார். இயக்குநராக ரிஷப் ஷெட்டி அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான கிரிக் பார்ட்டி, சா.ஹி.பிர.ஷாலே காசர்கோடு, கொடுகே: ராமண்ணா ராய் மற்றும் காந்தாரா ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ரிஷப் ஷெட்டி இயக்கி நாயகனாக நடித்த காந்தாரா படம் உலக அளவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கார்ந்தாரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரிஷப் ஷெட்டி தற்போது காந்தாரா சாப்டர் 1 என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்தப் படம் வருகின்ற 2-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் தமிழ் ட்ரெய்லரை நேற்று 22-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

உணவு என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது:

இந்த நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில் நேற்று ஒரு செய்தியாளர்களின் சந்திப்பில் நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி படக்குழு சொன்னதாக வெளியான பொய்யான போஸ்டர் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அதன்படி படக்குழு வெளியிட்டதாக சமீபத்தில் ஒரு போஸ்டர் ஒன்று வெளியாகி இருந்தது. அதில் காந்தாரா சாப்டர் 1 படத்தை பார்க்க நினைக்கும் ரசிகர்கள் அசைவ உணவுகளையோ அல்லது மது அருந்தவோ கூடாது என்று படக்குழு தெரிவித்து இருந்தது போல இருந்தது. ஆனால் இதனை தானோ அல்லது தயாரிப்பு நிறுவனமோ வெளியிடவில்லை என்று தெரிவித்த ரிஷப் ஷெட்டி உணவு என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது என்று விளக்கம் அளித்துள்ளார்.

Also Read… இந்தி படங்களில் வரிசையாக கமிட்டாகும் பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தன்!

இணையத்தில் கவனம் பெறும் ரிஷப் ஷெட்டியின் பேச்சு:

Also Read… சக்திமான் படத்திற்காக பேசில் ஜோசப் 2 வருசம் காத்திருந்தார் – அனுராக் காஷ்யப்