நடிகர் ரியோவின் நடிப்பில் 6-வது படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

Rio Raj New Movie Update: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரியோ ராஜ். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் ரியோ நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

நடிகர் ரியோவின் நடிப்பில் 6-வது படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

ரியோ

Published: 

30 Nov 2025 17:44 PM

 IST

சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது கெரியரைத் தொடங்கியவர் ரியோ ராஜ். இவர் அதனைத் தொடர்ந்து சீரியல்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த போதே ரியோ ராஜிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பைப் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சீரியல்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு ரசிகர்களின் பட்டாளம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரையில் இருக்கும் போதே மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகர் ரியோ ராஜ் வெள்ளித்திரையில் நாயகனாக நடிக்கத் தொடங்கிய போது அவரது படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. அதனைத் தொடர்ந்து இறுதியாக நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் வெளியான 3 படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. குறிப்பாக இறுதியாக வெளியான ஸ்வீட் ஹார்ட் மற்றும் ஆண்பாவம் பொல்லாதது படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் வெளியான ஆண் பாவம் பொல்லாதது படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது ஓடிடியிலும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. ரொமண்டிக் காமெடி பாணியில் வெளியான இந்தப் படம் பல சீரியசான விசயங்களை மிகவும் காமெடியாக ரசிகர்களுக்கு புரியும் வகையில் எடுக்கப்பட்டு இருந்தது. மேலும் போலி பெண்ணியம் பற்றி விளக்கமாக இந்தப் படத்தில் பேசப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரியோவின் நடிப்பில் 6-வது படத்தின் அப்டேட் இதோ:

இந்த நிலையில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் 6-வதாக உருவாக உள்ள படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை 1-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு காலை 11:11 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது ராஷ்மிகாவின் தி கேர்ள்ஃபிரண்ட் படக்குழு… எப்போது ரிலீஸ் தெரியுமா

படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… ரஜினிகாந்தின் 75-வது பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய சர்ப்ரைஸ்!

Follow Us
வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்பாடுகளில் அதிரடி மாற்றம்.. இந்தியாவில் அமலுக்கு வந்தது..
துபாய், தோஹா, பஹ்ரைனில் ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதல்.. அமெரிக்கத் தளங்கள் இலக்கு!
ஐதராபாத் - ஈரான்.. பல நூற்றாண்டுகளைக் கடந்த கலாச்சார பந்தம்..
ஒவ்வொரு லைக்கிற்கும் ஒருமுறை ஸ்கிப்பிங் செய்வேன்... 1.8 மில்லியன் லைக்குகளை பெற்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி