அரசன் படத்தில் இணைந்த நடிகர் கென் கருணாஸ்… வைரலாகும் தகவல்
Sources Said Actor Ken Karunas Has Joined The Arasan Movie: தமிழ் சினிமாவில் தற்போது நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் படம் அரசன். இந்தப் படத்தில் நடிகர் கென் கருணாஸ் இணைந்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிலம்பரசன் மற்றும் கென் கருணாஸ்
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வெற்றிமாறன். தொடர்ந்து சமூகம் சார்ந்த பிரச்சனைகளை மையமாக வைத்து இயக்குநர் வெற்றிமாறன் படங்களை இயக்கி வருகிறார். அதன்படி வெற்றிமாறன் இயக்கத்தில் இதுவரை திரையரங்குஅக்ளில் வெளியான அனைத்துப் படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் இயக்குநர் வெற்றிமாறன் தற்போது நடிகர் சிலம்பரசனை வைத்து படம் இயக்கி வருகிறார். அப்படி அவர் எழுதி இயக்கி வரும் படத்திற்கு அரசன் என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி தொடர்ந்து பிசியாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் அரசன் படத்தில் நடிகர் தனுஷின் வட சென்னை படத்தில் நடித்துள்ள கதாப்பாத்திரங்கள் இணைந்து நடிக்க உள்ளதாக முன்பே தகவல்கள் தெரிவித்தது. மேலும் வடசென்னை படம் நடைப்பெற்ற அதே நேரத்தில் அரசன் படம் நடைபெறுவது போன்றும் அந்தப் படத்தில் உள்ள கதாப்பாத்திரங்கள் இந்தப் படத்திலும் தோன்றுவது போல காட்சியமைக்கப்படும் என்று இயக்குநர் வெற்றிமாறன் முன்னதாக தெரிவித்து இருந்தார்.
அரசன் படத்தில் இணைந்த நடிகர் கென் கருணாஸ்:
இந்த நிலையில் வட சென்னை படத்தில் வரும் ராஜன் வையரா என்ற கதாப்பாத்திரங்கள் அரசன் படத்தில் தோன்ற உள்ளது. அதன்படி அரசன் படத்தின் செட்டில் ராஜன் வகையரா என்று அழைக்கப்படும் கதாப்பத்திர தொடர்ச்சிகான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மேலும் வட சென்னை படத்தில் உள்ள ராஜன் என்ற அமீரின் கதாப்பாத்திரத்தின் சின்ன வயது கதாப்பாத்திரமாக நடிகர் கென் கருணாஸ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… ஜெயிலர் 2 – KHxRK படங்களின் நிலை என்ன? ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#VadaChennai universe is expanding the buzz is that Rajan Vagaiyarah shoot is said to be resumed with #KenKarunas in #Arasan sets
Ken as young “Rajan” 🤔 pic.twitter.com/lon0dQY5i3
— Movies Singapore (@MoviesSingapore) April 6, 2026
Also Read… பார்வதியுடன் சென்று புது கார் வாங்கிய பிக் பாஸ் கம்ருதீன் – வைரலாகும் வீடியோ!