இந்தி படங்களில் வரிசையாக கமிட்டாகும் பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தன்!

Actor Unni Mukundan: மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் உன்னி முகுந்தன். இவர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருக் நிலையில் இந்தி சினிமாவில் இவரது நடிப்பில் உருவாக உள்ள 2 படங்கள் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

இந்தி படங்களில் வரிசையாக கமிட்டாகும் பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தன்!

உன்னி முகுந்தன்

Published: 

22 Sep 2025 17:15 PM

 IST

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்தன். கடந்த 2011-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான சீடன் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார் உன்னி முகுந்தன். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் முருகராக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து கடந்த 2012-ம் ஆண்டு மம்முட்டி உடன் இணைந்து பாம்பே மார்ச் 12 என்ற படத்தில் நடித்ததன் மூலம் மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் பலப் படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார் நடிகர் உன்னி முகுந்தன். இவரது நடிப்பில் வெளியான மல்லிகாபுரம் மற்றும் மார்கோ என இரண்டு படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதில் மல்லிகாபுரம் படத்தின் ஐப்பன் பக்தர்களாக இருக்கும் சிறுமிக்கு நடிகர் உன்னி முகுந்தன் சபரி மலைக்கு செல்ல உதவி செய்கிறார். இதனால் அந்த சிறுமி உன்னி முகுந்தை ஐயப்பனாக நினைக்கிறது. இறுதியில் அவர் ஐயப்பன் கோவில் உள்ள காவல் நிலையத்தில் போலீஸாக இருப்பது க்ளைமேக்ஸில் தெரியும். ஆனால் அந்த சிறுமியைப் பொருத்தவரை ஐயப்பனாகவே நடிகர் உன்னி முகுந்த் காட்ச்சியளித்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து 2024-ம் ஆண்டு நடிகர் உன்னி முகுந்த நடிப்பில் வெளியான மார்கோ படம் பான் இந்திய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

இந்தி சினிமாவில் தொடர்ந்து படங்களில் கமிட்டாகும் உன்னி முகுந்தன்:

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நரேந்திர மோடியாக நடிக்க உள்ளதாக முன்னதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி மா வந்தே என்று அந்தப் படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அந்தப் படத்தை தொடர்ந்து தற்போது ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பாக இரண்டு இந்தி படங்கள் உருவாக உள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் தற்போது உன்னி முகுந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான எக்ஸ் தள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ராஜமௌலி இயக்கத்தில் கூட நடிச்சுட்டேன்… ஆனா தனுஷ் கூட வேலை செய்வது கடினம் – சத்யராஜ்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஓவியாவிற்கு பிறகு ரசிகர்களிடையே அதிகம் பிரபலமான பிக்பாஸ் போட்டியாளர் யார் தெரியுமா?