அதிகாரம் கொடுக்கப்படலாம்.. ஆனால் மரியாதை சம்பாதிக்கப்பட வேண்டும் – விஜய்க்கு வாழ்த்து சொன்ன ரவி மோகன்

Ravi Mohan congratulates Thalapathy Vijay | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவர் நடிகர் விஜய் சட்டமன்ற தேர்தலில் வெற்றியடைந்ததற்கு தனது வாழ்த்துகளை எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.

அதிகாரம் கொடுக்கப்படலாம்.. ஆனால் மரியாதை சம்பாதிக்கப்பட வேண்டும் - விஜய்க்கு வாழ்த்து சொன்ன ரவி மோகன்

Jayam Ravi

Published: 

04 May 2026 17:31 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். தமிழ் சினிமாவில் ஜெயம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். அறிமுகம் ஆன முதல் படத்திலேயே மக்களிடையே நல்லவ் வரவேற்பைப் பெற்றார் ரவி மோகன். இந்தப் படத்தை இவரது அண்ணன் மோகன் ராஜா இயக்கி இருந்தார். இவர்களின் கூட்டணியில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் நடிகர் ரவி மோகன் நடிப்பில் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியனா பெரும்பான்மையான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து நாயகனாக கலக்கி வந்த நடிகர் ரவி மோகன் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான பராசக்தி படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.

நாயகனாக மக்களின் மனதை கவந்தது போல வில்லனாகவும் மக்களின் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து படங்களில் பிசியாக நடிப்பது மற்றும் இன்றி இயக்குவது தயாரிப்பது என பிசியாக வலம் வருகிறார் ரவி மோகன். இந்த நிலையில் நடிகர் விஜய் சட்டமன்ர தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ள நிலையில் அவரை வாழ்த்தி ரவி மோகன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதிகாரம் கொடுக்கப்படலாம்.. ஆனால் மரியாதை சம்பாதிக்கப்பட வேண்டும்:

விஜய் அண்ணா, அதிகாரம் என்பது வழங்கப்படக்கூடியது, ஆனால் மரியாதை என்பது சம்பாதிக்கப்பட வேண்டியது. நீங்கள் இவ்விரண்டையும் ஒருங்கே பெற்றிருக்கும் பாக்கியசாலி. இது வெறும் வெற்றியல்ல, நம்பிக்கையினால் முத்திரையிடப்பட்ட ஒரு புரட்சி. நாங்கள் எப்போதும் உங்கள் பக்கமே துணை நிற்போம் அண்ணா. சில நாட்களுக்கு முன்பு நாம் சந்தித்தபோது, ​​கவலைப்படாதேப்பா, நல்லதே நடக்கும் என்று நீங்கள் கூறிய அந்தத் தருணத்தில்தான் எனக்காகவும், என் குடும்பத்திற்காகவும் நீங்கள் வெற்றியை ஈட்டிய நாளாக அது அமைந்தது. துணிந்து முன்னேறுங்கள் அண்ணா. எதிர்காலம் ஏற்கனவே உங்கள் பக்கம் சாய்ந்துவிட்டது. என்றென்றும் உங்கள் மீது மாறாத அன்பு பொழியும் என்று ரவி மோகன் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… நெல்சனின் முதல் படம் பாதியிலேயே நின்னுடுச்சு… ஆனா இப்போ – நெல்சன் குறித்து பெருமையாக பேசிய ஆர்.ஜே.பாலாஜி

நடிகர் ரவி மோகன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Anikha Surendran: பட்டதாரியான அனிகா சுரேந்திரன்.. வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்!

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..